நம்பிக்கை வாக்கெடுப்பில் தென்னாப்பிரிக்க அதிபர் ஜூமா 8-வது முறையாக வெற்றி

  • 8 ஆகஸ்ட் 2017

தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா, தனக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான ரகசிய வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படுவதால், ஆளும் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் பக்கம் வாக்களிப்பார்கள் என எதிர்க்கட்சியினர் எதிர்பார்த்தனர்.

ஆனால், 198க்கு 177 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் அந்தத் தீர்மானம் தோல்வியடைந்தது.

இந்தச் செய்தியை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

எட்டாவது முறையாக, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஜுமா வெற்றி பெற்றிருக்கிறார்.

எதிர்க்கட்சிகளின் தீர்மானம் வெற்றி பெற, ஆளுங்கட்சியின் மொத்தமுள்ள 249 உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 50 பேர் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக வாக்களித்திருக்க வேண்டும்.

அதே நேரத்தில், ஆளுங்கட்சி எம்.பி.க்களில் 26 பேர் அரசுக்கு எதிராக வாக்களிக்க, 9 பேர் வாக்கெடுப்பைப் புறக்கணித்தனர்.

முன்னதாக, எதிர்க்கட்சியான அகாங் கட்சியின் துணைத் தலைவர் ஆன்ட்ரிஸ் லோம்மா, வாக்கெடுப்பில் ஜுமா வெற்றி பெற்றால், அது தென்னாப்பிரிக்கா நரகத்தின் நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கு ஒப்பானதாகிவிடும் என்று எச்சரித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்