அமெரிக்காவின் பசிபிஃக் பிராந்தியத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்த பரிசீலினை: மிரட்டும் வட கொரியா

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க பசிபிஃக் பிராந்தியமான குவாமில் ஏவுகணை தாக்குதல்களை நடத்த பரிசீலித்து வருவதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வட கொரியாவுக்கு சீற்றத்துடன் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கு சிலமணி நேரம் கழித்து வட கொரிய ராணுவத்தின் அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி அந்நாட்டு அரசு ஊடகம் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குவாம் பகுதியில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ராக்கெட்களை வீசும் திட்டம் ஒன்று குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையேயான இந்த அறிக்கை பறிமாற்றம் இருநாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை தீவிரமாக அதிகரித்துள்ளது.

வட கொரியா மீதான மேலும் புதிய பொருளாதார தடைகளுக்கு சமீபத்தில் ஐ.நா ஒப்புதல் வழங்கியது. அதற்கு, ''எங்களுடைய இறையாண்மை மீது தீவிரமான வன்முறை மீறல்'' என்று கருத்து தெரிவித்த வட கொரியா, அமெரிக்கா இதற்கான விலையை கொடுக்கும் என்றும் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்