செளதியின் `ரகசிய' செயலி: தகவல் அனுப்பியவரின் அடையாளம் தெரியாது

செளதி அரேபியாவின் 'செய்தி செயலி' சராஹா, ஒரே மாதத்தில் 30 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதை இயக்குவது மூன்று பேர் என்பதுதான் வியப்பளிக்கிறது.

இந்த செயலியை பயன்படுத்தி யாருக்கு வேண்டுமானாலும் செய்தி அனுப்பலாம். ஆனால் செய்தி அனுப்பியது யார் என்ற தகவல், பெறுநருக்கு தெரியாது.

எனவே, இந்த செய்திக்கு பதிலும் அனுப்பமுடியாது. இவையே 'சராஹா'வை மக்கள் விரும்புவதற்கான காரணங்கள்.

'சராஹா' என்ற அரபு வார்த்தையின் பொருள் 'நேர்மை' என்பதாகும்.

இந்த செயலியை உருவாக்கியவர் 29 வயது செளதி அரேபிய இளைஞர் ஜென் அல்-அபீதீன் தெளஃபீக்.

மக்களிடையே சராஹா இந்த அளவு பிரபலமாகும் என்பதை அவரால் முன்பே கணிக்க முடிந்ததா?

சராஹாவை ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்வார்கள் என்றே தெளஃபீக் எதிர்பார்த்தாராம். ஆனால், கூகுள் ப்ளே ஸ்டோரில் மட்டுமே 50 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் சராஹாவை பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பது அவருக்கும் வியப்பை அளிக்கிறது.

செய்திகளை அனுப்புவது யார் என்று தெரியாவிட்டால், அது தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதே?

ஆன்லைனில் பாதிக்கப்படுபவர்களும், தவறுகள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை தடுக்க கடுமையான சட்டங்களும், நெறிமுறைகளும் உள்ளன. ஆன்லைன் முறைகேடுகளை வடிகட்டுவதற்கான வசதிகளும் உள்ளதால் அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை என்கிறார் ஜென் அல்-அபீதீன் தெளஃபீக்.

Image caption சராஹாவை உருவாக்கிய தெளஃபீக்

இந்த செயலியை பயன்படுத்தி, தொழிலாளர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு தங்கள் கருத்துகளை முதலாளியிடம் தெரிவிக்கலாம் என்று சொல்கிறார்.

'ஒரு விசயத்தை நேரடியாக சொல்ல முடியாதபோது, அதற்கான மாற்றுவழி வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த செயலி உருவாக்கப்பட்டது' என்கிறார் தெளஃபீக். 'ஏனெனில் நீங்கள் சொல்வது எதிர்தரப்பினருக்கு பிடிக்காமல் போகலாம்.'

பிற செய்திகள்:

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கடத்தப்பட்ட பிரபல மாடல்: என்ன நடந்தது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :