பிபிசி தமிழில் இன்று... பகல் 2 மணி வரையான முக்கியச் செய்திகள்

  • 9 ஆகஸ்ட் 2017

இன்று (புதன்கிழமை) பிபிசி தமிழ்.காமில் வெளியான செய்திகளில் முக்கியமானவற்றை தொகுத்து வழங்கியுள்ளோம்.

படத்தின் காப்புரிமை TaTaTowel

பெண்களுக்கான 'டவல்' பிராவுக்கு பெருகும் ஆதரவு

`டா-டா-டவல்` என பெயரிடப்பட்டுள்ள துண்டால் செய்யப்பட்ட உள்ளாடைக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகி வருகிறது. பார்ப்பதற்கு பிகினி உடையின் மேலாடை போல காட்சியளிக்கும் இந்த உள்ளாடை முழுக்க துணியால் உருவாக்கப்பட்டது.

இந்த செய்தியை படிக்க: பெண்களுக்கான 'டவல்' பிராவுக்கு பெருகும் ஆதரவு

படத்தின் காப்புரிமை Reuters

ராக்கெட் தாக்குதல் குறித்து பரிசீலிக்கும் வட கொரியா

அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குவாம் பகுதியில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ராக்கெட்களை வீசும் திட்டம் ஒன்று குறித்து வட கொரியா பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பகுதியில்தான் அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை படிக்க: அமெரிக்காவின் பசிபிஃக் பிராந்தியத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்த பரிசீலினை: மிரட்டும் வட கொரியா

படத்தின் காப்புரிமை Google

செளதி அரேபியாவின் 'சராஹா' செயலி சாதனை

செளதி அரேபியாவின் 'செய்தி செயலி' சராஹா, ஒரே மாதத்தில் 30 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதை இயக்குவது மூன்று பேர் என்பதுதான் வியப்பளிக்கிறது. இந்த செயலியை பயன்படுத்தி யாருக்கு வேண்டுமானாலும் செய்தி அனுப்பலாம். ஆனால் செய்தி அனுப்பியது யார் என்ற தகவல், பெறுநருக்கு தெரியாது.

இந்த செய்தியை படிக்க: செளதி அரேபியாவின் 'சராஹா' செயலி சாதனை; மக்களை ஈர்த்த ரகசியம் என்ன?

படத்தின் காப்புரிமை Getty Images

பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்த மருத்துவர்

அனுராதபுரத்தில் உள்ள அரச மருத்துவமனையில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட கழிவறையில் ரகசிய கேமரா ஒன்றை பொருத்திய அரசு மருத்துவர் ஒருவருக்கு எதிராக போலீசார் அனுராதபுர மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த செய்தியை படிக்க: பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா; இலங்கை அரசு மருத்துவர் மீது வழக்கு

படத்தின் காப்புரிமை CHURCH OF SCOTLAND

151 ஆண்டுகளுக்கு பிறகு உரிமையாளர்களிடம் திரும்பி அளிக்கப்பட்ட பைபிள்

அமெரிக்காவிலிருந்து 3,500 மைல்கள் பயணம் செய்து, 151 ஆண்டுகள் பழமையான பைபிள் ஒன்று, அதன் உரிமையாளர்களான ஸ்காட்லாந்து குடும்பத்தின் வம்சாவழியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை படிக்க: 151 ஆண்டுகளுக்கு பிறகு உரிமையாளர்களிடம் திரும்பி அளிக்கப்பட்ட பைபிள்

முக்கிய தகவல்களை கசியவிட்டு மீட்புப் பணம் கேட்டு பிரபல நிறுவனத்தை மிரட்டும் ஹேக்கர்கள்

கேம் ஆஃப் த்ரோன்ஸின் கதை உள்ளிட்ட பொழுதுபோக்கு நிறுவனமான எச்.பி.ஒ நிறுவனத்தின் முக்கியத் தகவல்களை கசியவிட்ட ஹேக்கர்கள் (கணினி வலையமைப்பை உடைத்து நாசம் செய்பவர்கள்) மீட்புப்பணத்தை அளிக்குமாறு ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த செய்தியை படிக்க: கேம் ஆஃப் த்ரோன்ஸ் உள்பட முக்கிய தகவல்களை கசியவிட்டு பணம் கேட்டு மிரட்டும் ஹேக்கர்கள்

கடத்தப்பட்ட பிரபல மாடல்: என்ன நடந்தது?

பிரபல பிரிட்டன் மாடலான கிலோய் அய்லிங், இத்தாலியில் சில மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அதன் பிறகு அவருக்கு என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இக்காணொளி.

காணொளியை முழுமையாக காண:

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கடத்தப்பட்ட பிரபல மாடல்: என்ன நடந்தது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்