பிபிசி தமிழில் இன்று... இது வரை வெளியான முக்கியச் செய்திகள்

  • 9 ஆகஸ்ட் 2017

இன்று (புதன்கிழமை) பிபிசி தமிழ்.காமில் வெளியான செய்திகளில் முக்கியமானவற்றை தொகுத்து வழங்கியுள்ளோம்.

படத்தின் காப்புரிமை Twitter

பெண் பத்திரிகையாளர்மீதுடிவிட்டரில்தாக்குதல்

நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் குறித்தும் அவரது நடிப்பு குறித்தும் டிவிட்டரில் கருத்துத் தெரிவித்த பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் மீது டிவிட்டரில் ஆபாச சொற்களால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவுசெய்துள்ளது.

இந்தச் செய்தியைப் படிக்க: நடிகர் விஜயின் திரைப்படைத்தை விமர்சித்த பெண் பத்திரிகையாளருக்கு தொடரும் தாக்குதல்

இலங்கை ரோஹிஞ்சா முஸ்லிம்கள்

இலங்கையில் சட்ட விரோதக் குடியேற்றகாரர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோகிஞ்சா முஸ்லிம்களை, முகாமுக்கு வெளியே தங்க வைத்துப் பராமரிக்க நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் படிக்க: ரோஹிஞ்சா முஸ்லிம்களை தனி இடத்தில் பராமரிக்க இலங்கை நீதிமன்றம் அனுமதி

படத்தின் காப்புரிமை SRILANKA NAVY

ராக்கெட் தாக்குதல் குறித்து பரிசீலிக்கும் வட கொரியா

அமெரிக்க பசிபிஃக் பிராந்தியமான குவாமில் ஏவுகணை தாக்குதல்களை நடத்த பரிசீலித்து வருவதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியைப் படிக்க: அமெரிக்காவின் பசிபிஃக் பிராந்தியத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்த பரிசீலினை: மிரட்டும் வட கொரியா

படத்தின் காப்புரிமை Getty Images

கொதிக்கும் பெண் இணையவாசிகள்

இந்தியாவில் உள்ள பெண்கள் சமூக ஊடகங்களில் தாங்கள் இரவு நேரத்தை எவ்வாறு மகிழ்ச்சியுடன் செலவிடுகின்றனர் என்பதை #AintNoCinderella என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.

இந்தச் செய்தியைப் படிக்க: இரவில் பெண்கள் வெளியே நடமாட தடை போடும் தைரியம் யாருக்கு?

செளதியின் `ரகசிய' செயலி

செளதி அரேபியாவின் 'செய்தி செயலி' சராஹா, ஒரே மாதத்தில் 30 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி செய்தி அனுப்பியது யார் என்ற தகவல், பெறுநருக்கு தெரியாது.

இந்தச் செய்தியைப் படிக்க: செளதியின் `ரகசிய' செயலி: தகவல் அனுப்பியவரின் அடையாளம் தெரியாது

கடத்தப்பட்ட பிரபல மாடல்

பிரபல பிரிட்டன் மாடலான கிலோய் அய்லிங், இத்தாலியில் சில மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அதன் பிறகு அவருக்கு என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இக்காணொளி.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கடத்தப்பட்ட பிரபல மாடல்: என்ன நடந்தது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :