வடகொரியா கோருவது சுயபாதுகாப்பா, பேரழிவா?

Reuters படத்தின் காப்புரிமை Reuters

வட கொரியா ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வறிய நிலையில் உள்ள ஆனால், அதிகமாக ராணுவ வலிமை கொண்ட நாடு. "உயிர் பிழைப்பது" மட்டுமே அதன் தலைமையின் ஒற்றை அத்தியாவசிய இலக்கு என்கிறார் பிபிசி செய்தியாளர் ஜோனாதன் மார்கஸ்.

அமெரிக்கா - வடகொரியா இடையிலான மோதல் நிலை தொடர்பாக ஆராயும் ஜோனாதன் மார்கஸின் கட்டுரை இது.

தமது ஆட்சிக்கான இறுதி காப்பீட்டுக் கொள்கை போல, அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களில் மிகப் பெரிய வளங்களை வட கொரியா குவித்து வைத்துள்ளது.

அதன் அணுசக்தி திறன்கள் எவ்வகையிலாவது பயன்படுத்தப்பட்டால் அது பேரழிவாகலாம். குறிப்பாக, வடகொரியாவுக்கே அது பாதகமாக அமையலாம்.

தற்போது தொடரும் மோதலில், வடகொரியா அரசு பிழைக்க முடியாது. ஆனால், அந்த மோசமான வாய்ப்பு பற்றி உடனடியாகக் கவலை கொள்ள வேண்டியதில்லை.

வாஷிங்டனுக்கும் பியொங்யாங்குக்கும் இடையிலான வாய்த்தகராறு, செயல் வடிவில் தீவிரமாகி போருக்கு வழிவகுக்கக் கூடிய அச்சுறுத்தலாக அது கருதப்படுகிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வடகொரியாவை உளவு பார்க்கும் அமெரிக்க விமானங்கள்

பலப்பிரயோகம் செய்வதை தமது அத்தியாயமாகக் கொண்டுள்ள நாடான வடகொரியா தனது கடந்த காலத்தைப் போலவே மீண்டும் செயல்படாம்.

கடந்த 2010, மார்ச் மாதம் தென் கொரியாவின் சிறிய வகை போர்க் கப்பலை வடகொரியா மூழ்கடித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அதே ஆண்டில் தென் கொரிய தீவு மீது பீரங்கி குண்டுகள் முழக்கப்பட்டன. அங்கு தற்போதைய நெருக்கடியான நிலை தீவிரமானால், வடகொரியாவின் கோபத்துக்கு ஆளாகக் கூடிய நாடாக தென் கொரியாவே இருக்கும் எனத் தெரிகிறது.

அளவும், தரமும்

தென் கொரியாவுடன் ஒப்பிடுகையில் வடகொரியாவின் ராணுவ வலிமையின் எண்ணிக்கை அதிகமானது.

இரண்டு கொரிய நாடுகளுக்கு இடையிலான எல்லையைக் குறிக்கும் பகுதிக்கு அருகே ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட்ட மண்டலத்தில் தனது துருப்புகளை வடகொரியா குவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

மோதல்கள் தொடங்கிய சில மணி நேரத்தில் தென் கொரிய தலைநகரான சியோலைக் குறிவைத்து பீரங்கி குண்டுகளையும் அதிகபட்சமாக ராக்கெட்டுகளையும் வடகொரியா வீசக் கூடும் என்று தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகிறது.

உண்மையில் அப்படி கிடையாது. ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட்ட மண்டலத்தில் இருந்து சுமார் நாற்பது கி.மீ. தூரத்தில் சியோல் உள்ளது. வடகொரியாவின் நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய ஆயுத தளவாடங்கள் மூலமே சியோலை குறி வைக்க முடியும்.

அவ்வாறு குறிவைத்து தாக்கினால் அது வடகொரியாவுக்கு ஏமாற்றத்தையே தரும். ஏனென்றால் அதன் பெரும்பாலான பீரங்கி தளவாடங்கள் நகரக் கூடியவை அல்ல.

அதனால் தென்கொரியா திருப்பித் தாக்கினால் அதனால் வடகொரியாவுக்கு பாதிப்பு ஏற்படும்.

அமெரிக்க ராணுவ ஆதரவுடன், தரத்தில் சிறந்த துல்லியமாகத் தாக்கவல்ல ஆயுதங்கள் மூலம் தென்கொரியாவால் தாக்குதல் நடத்த முடியும்.

1950-களில் நடந்த கொரிய போரை போல, தெற்கு நோக்கிய வடகொரிய படைகளின் நடமாட்டத்தால் அதிக அளவில் குடிமக்கள் உயிரிழக்க வாய்ப்புள்ளது. அப்படி உயிரிழப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சீன மாணவர்கள் மற்றும் சியோலில் வசிக்கும் தொழில்சார் மக்களாக இருப்பர்.

அதற்கு பதிலடியாக நடத்தப்படும் தாக்குதல், வடகொரிய ஆட்சிக்கே பேரழிவாகி விடும்.

அதுபோன்ற இரண்டாவது கொரிய போர் ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை. ஆனால், தனது மோதலைத் தூண்டக் கூடிய அல்லது பொதுவான மோதலை ஏற்படுத்தக் கூடிய வகையில் தமது ராணுவ படைகளை வட கொரியா பயன்படுத்தலாம் என்ற அபாயம் உள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

ஏழை நாடும் பலதரப்பட்ட ஆயுதங்களும்

பீரங்கிகள் மற்றும் ராக்கெட் படைகள் மட்டுமின்றி ரசாயன ஆயுதங்களையும் வடகொரியா விரிவாக வைத்துள்ளது. அந்நாட்டிடம் நச்சுயிரி ஆயுதங்களும் இருக்கலாம்.

தீவிர பயிற்சி பெற்ற சிறப்புப் படையினர் மற்றும் தென்கொரியாவில் ஊடுவி தாக்குதல் நடத்துவதற்காகவே பயிற்சி பெற்ற படைப்பிரிவுகளும் வடகொரியாவிடம் உள்ளது.

இணைய தாக்குதல்களை நடத்தும் திறனையும் அந்நாடு மேம்படுத்தியுள்ளது.

எனவே, ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கான எல்லா வாய்ப்புகளையும் வடகொரியா ஆராயும்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வட கொரியா அருகே கூட்டு ராணுவ பயிற்சியில் அமெரிக்க - தென் கொரியா படைகள்

ஆனால், அமெரிக்கா அல்லது அதன் ஆதரவு நாடுகளுடன் தற்போதைய நிலையில் ஏதேனும் தாக்குதலில் ஈடுப்டடால் அது போர் ஏற்படுவதற்கான வாய்ப்பையே அதிகரிக்கும்.

அத்தகைய தற்கொலை முடிவை பியொங்யாங் ஆட்சி எடுக்காது என்று கருதினாலும், கடந்த கால செயல்பாடுகளுக்கு முரணாக செயல்படக் கூடிய அளவுக்கு இது பகுத்தறிவற்ற ஆட்சியாக இருக்காது.

ஒருவேளை தாக்குதலில் ஈடுபட்டால், அதனால் விளையும் ஆபத்துகளை பற்றியும் வடகொரியா அரசின் தலைமை அறிந்திருக்க வேண்டும்.

வடகொரியாவின் நிலையில் இருந்து பார்க்கும்போது, அமெரிக்காவை அச்சுறுத்துவதற்காக அணு ஆயுதத்தையும், கண்டம் விட்டு கண்டும் பாய்ந்து தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணையை வைத்திருப்பது பகுத்தறிவுமிக்க செயலாகப் பார்க்கப்படுகிறது.

இராக் மற்றும் லிபியாவில் சர்வாதிகார அரசுகள் வீழ்வதற்கு காரணம், அவற்றிடம் போராட ஆயுதங்களே இல்லாத நிலை இருந்தது என்று வட கொரியா வாதிடுகிறது.

அமெரிக்காவுடன் நேரடியாக மோதி ஆபத்தை வரழைத்துக் கொண்டு ஆட்சியை இழப்பது சரியானதாக இருக்காது என்று வடகாரியாவுக்கும் தெரியும்.

கொரிய தீபகற்பத்தில் எத்தகைய போர் ஏற்பட்டாலும், அதனால் வாஷிங்டனுக்கே அதிக பலன்கள் கிடைக்கும்.

இடவமைப்பின் இயல்பால் வடகொரிய படைகள், தெற்கு நோக்கிய வரம்புக்கு உட்பட்ட பகுதிகளுக்கே முன்னேற முடியும்.

அவற்றின் மீது வான் மற்றும் தரைவழி தாக்குதலை எளிதாக பென்டகன் நடத்தி வீழ்த்தி விட முடியும்.

அத்தகைய போர் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று. அது இரு தரப்பு நலன்களுக்கும் பலன் அளிக்காது.

படத்தின் காப்புரிமை Reuters

விகாரமான மற்றும் சொற்போரை அடிப்படையாகக் கொண்ட தவறுகள், தவறான கணக்கீடு, தவறான செய்கை போன்றவைதான் தற்போதைய ஆபத்தான நிலைக்கு முழு காரணமாகும்.

வடகொரியா அதிகப்படியாகச் செயல்படும் இயல்பைக் கொண்டுள்ளது. இந்நிலையில் தனது நிலையை வெளிப்படுத்துவதில் அமெரிக்காதான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வட கொரிய ஏவுகணைகளை அழிக்கவல்ல அமெரிக்க ஏவுகணை அமைப்புமுறை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்