பிபிசி தமிழில் இன்று... பகல் 2 மணி வரையான முக்கியச் செய்திகள்

  • 10 ஆகஸ்ட் 2017

இன்று (வியாழக்கிழமை) பிபிசி தமிழ்.காமில் வெளியான செய்திகளில் முக்கியமானவற்றை தொகுத்து வழங்கியுள்ளோம்.

படத்தின் காப்புரிமை Reuters

வட கொரியா ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வறிய நிலையில் உள்ள ஆனால், அதிகமாக ராணுவ வலிமை கொண்ட நாடு. "உயிர் பிழைப்பது" மட்டுமே அதன் தலைமையின் ஒற்றை அத்தியாவசிய இலக்கு என்கிறார் பிபிசி செய்தியாளர் ஜோனாதன் மார்குஸ்.

செய்தியை படிக்க: வடகொரியா கோருவது சுயபாதுகாப்பா, பேரழிவா?

படத்தின் காப்புரிமை Getty Images

பெரும்பாலான மக்கள் இணையத்தில் ஆபாச படங்கள் பார்ப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. பொதுவாக மூடிய கதவுகளுக்குள் தான் இது நடக்கும்.

செய்தியை படிக்க: பொது இடங்களில் ஆபாச படங்கள் பார்ப்பது சரியா?

தான் சமூதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் என்றும், யாருடைய திரைப்படத்தையும் யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உள்ளது என்றும் நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

செய்தியை படிக்க: ''சமூதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான்'': நடிகர் விஜய்

படத்தின் காப்புரிமை CHRISTOF KOEPSEL

அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவில் வீடு புகுந்து கொள்ளை அடித்த நபர் ஒருவர், குற்றம் நடந்த வீட்டின் கழிவறையைப் பயன்படுத்திவிட்டு, அதை நீர் ஊற்றிச் சுத்தம் செய்யாமல் போனதன் மூலம், அங்கு ஒரு முக்கிய தடயத்தை விட்டுச் சென்றுள்ளார்.

செய்தியை படிக்க: திருடிவிட்டு கழிவறையை சுத்தம் செய்ய மறந்ததால் சிக்கிக்கொண்ட நபர்

ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களைப் பாதுகாக்க தமிழகத்தின் சில மாவட்டங்களில் காவல்துறையின் தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இது மட்டும் போதுமானதல்ல என்கிறார்கள் தலித் செயல்பாட்டாளர்கள்.

செய்தியை படிக்க: காதல் திருமணம் செய்தவர்களை பாதுகாக்க காவல்துறையின் தனிப்பிரிவு பயன்தருமா?

ஜினா மார்ட்டின் லண்டனில் நடந்த இசைத் திருவிழாவினை ரசித்துக்கொண்டிருந்த போது, ஒரு நபர் ஜினாவின் குட்டைப் பாவாடையின் கீழே மொபைலை வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். இதனை அறிந்த அவர், நேரடியாக காவல்துறைக்கு சென்று புகார் கொடுத்தார்.

செய்தியை படிக்க: குட்டைப் பாவாடைக்கு கீழிருந்து எடுத்த புகைப்படம்: போராடும் இளம்பெண்

படத்தின் காப்புரிமை FACEBOOK

காரில் சென்று கொண்டிருந்த ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு, பாஜக பிரமுகரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம், இரவு நேரங்களில் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்பது குறித்த விவாதங்களை மீண்டும் தொடங்கி வைத்துள்ளது.

செய்தியை படிக்க: இரவில் பெண்கள் வெளியே நடமாட தடைபோடுவது சட்டமா, சமூகமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்