''அமெரிக்க பிராந்தியம் மீது ராக்கெட் வீசும் திட்டம் விரைவில் தயார்'': வடகொரியா எச்சரிக்கை

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவுடனான வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா பிராந்தியமான குவாம் அருகே நான்கு ராக்கெட்டுகளை ஏவும் திட்டம் மிக விரைவில் தயாராகிவிடும் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.

இத்திட்டத்திற்கு வட கொரியா தலைவர் கிம் ஜோங்-உன் ஒப்புதல் வழங்கும் பட்சத்தில், ஏவப்படும் வாங்சாங்-12 ரக ராக்கெட்டுகள் ஜப்பானை கடந்து சென்று குவாமிலிருந்து சுமார் 30 கி.மீட்டர் தூரத்தில் தரையிறங்கும் என்று அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் சீற்றத்துடன் விடுத்திருந்த எச்சரிக்கைக்கு கண்டனம் தெரிவித்த வட கொரியா, அமெரிக்க அதிபர் முற்றிலும் பொது அறிவற்றவர் என்று கூறியுள்ளது.

வட கொரியாவின் நடவடிக்கைகள் அதன் ஆட்சி அதிகாரத்திற்கு முடிவுகட்டுவதற்காக கூட அமையலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.

Image caption குவாம் பிரதேசம்

குவாமில் உள்ள பிபிசி செய்தியாளர் ரூபெர்ட் விங்ஃபீல்ட் ஹேய்ஸ், வட கொரியாவின் எச்சரிக்கைகள் வெறும் பேச்சளவிலே பார்க்கப்படுவது போன்ற ஒரு உணர்வு இருப்பதாகவும், அவ்வாறு ராக்கெட் தாக்குதல் நடத்தினால் வட கொரியா ஆட்சி தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் என்பதை பலரும் உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்