அதிகரித்து வரும் பூமியின் வெப்பநிலை (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

1900 முதல் 2016 வரை: எப்படி மாறியிருக்கிறது பூமியின் வெப்பநிலை (காணொளி)

  • 11 ஆகஸ்ட் 2017

ஃபின்லாந்தை சேர்ந்த வானிலை ஆராய்ச்சியாளர் ஆண்ட்டி லிப்பொனென், நாசாவின் தரவுகளை வைத்து உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகளை ஒரு காணொளியாக தயாரித்துள்ளார். நாசா வெளியிட்டுள்ள பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை பகுப்பாய்வு (NASA GISS Surface Temperature Analysis) தரவுகளை அடிப்படையாக வைத்து இது உருவாக்கப்பட்டுள்ளது.

1900-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டு வரையிலான பூமியின் வெப்பநிலை தரவுகளை நாசா வெளியிட்டுள்ளது.

உலகில் உள்ள 190 நாடுகளை 5 பிராந்தியங்களாக பிரித்து, அவற்றின் வெப்பநிலை காலவரிசை தரவுகளை குறிப்பிட்டுள்ளனர்.

இதில் நீல நிறம் சராசரி வெப்பநிலையை விட குறைவாக இருப்பதை குறிக்கிறது. காவி நிறம் சராசரி வெப்பநிலையை விட சற்று அதிகமாக இருப்பதை குறிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு நாட்டின் வெப்பநிலையும் ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருக்கிறது. இருப்பினும் ஒட்டுமொத்தமாக பூமியின் வெப்பநிலை அதிகரித்து வரும் ஆபத்தான போக்கையும் இது சுட்டிக்காட்டுகிறது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :