கேமரா பெண்கள் - இணையவழிப் பாலியல் தொழில்: உள்ளே நடப்பது என்ன?

ரூமேனியாவின் இணையவழிப் பாலியல் தொழில்: உள்ளே நடப்பது என்ன?

பட மூலாதாரம், Getty Images

சர்வதேச அளவில் ஆபாசப் படத் துறையில் வெப் கேமராக்கள் வழியாக பாலியல் ரீதியாக உறவாடுவது இப்போது மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.

ரூமேனியாவில் "கேம் கேர்ள்ஸ்" (cam-girls) என்று அழைக்கப்படும் ஆயிரக்கணக்கான பெண்கள் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தும், வீட்டில் இருந்தும் பணிபுரிகிறார்கள். வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் செயல்படும் இந்தச் சந்தையின் பெரும்பாலான இணைய வழி வாடிக்கையாளர்கள் வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள்.

படக்குறிப்பு,

பணியிடத்தில் லானா.

புகாரெஸ்ட் நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தின் வெளியில் நின்று கொண்டிருக்கும் இளம் பெண்கள் புகை பிடித்துக்கொண்டே அவர்களுக்குள் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறார்கள் .

அவர்களின் அதீத அலங்காரமும், மிகவும் உயரமான குதிகளை உடைய காலணிகளும், அங்கங்களை வெளியில் காட்டக்கூடிய ஆடையும் அந்த வெப்பம் மிகுந்த கோடைக் காலத்திற்கு சற்றும் பொருத்தம் இல்லாததாக இருந்தது.

அந்தக் கட்டடத்தினுள் ஸ்டுடியோ-20 இரண்டு தளங்களில், 40 அறைகளைக் கொண்டுள்ளது. அதன் சுவர்களில் பெண்களின் கவர்ச்சியான படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. கதவு மூடப்பட்டிருந்தால் உள்ளே தொழில் நடக்கிறது என்று பொருள்.

மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஒரு பெண் தன் சர்வதேச வாடிக்கையாளருடன் வெப் கேமரா மூலம் உறவாடிக்கொண்டிருக்கிறார். அந்த அறையில் அவர் தனியாக இருக்கும் வரை எல்லாமே சட்டபூர்வமானதுதான். இணையம் மூலம் பாலுறவு கொள்ளும் சைபர்செக்ஸ் உலகில், அந்தப் பெண்கள் "மாடல்கள்", அந்த ஆண்கள் "உறுப்பினர்கள்."

அறை என் 8-இல் லானா உள்ளார். உள்ளே வட்ட வடிவ மெத்தை உள்ளது, அலமாரியில் அவரின் ஆடைகள் உள்ளன.

"நான் ஆடை, உள்ளாடை அல்லது தோலால் செய்யப்பட்ட ஆடைகள் ஆகியவற்றை உடுத்திக்கொள்வேன்," என்கிறார் லானா.

அந்த அறையின் ஒரு மூலையில், ஒரு பெரிய கணினி திரையும், விலையுயர்ந்த கேமராவும், தொழில்முறைப் புகைப்படக் கலைஞரின் லென்சுகளும் உள்ளன. ஆபாச இணையதளம் மூலம் லானா வேலை செய்யும்போது, சில டஜன் கண்கள் அவரைக் காணலாம். ஆனால் உறுப்பினர்களில் ஒருவர் அவருடன் மட்டுமே பிரத்யேகமாக வெப் கேமில் உறவாட, லானாவைத் தனி அறைக்குப் போகச் சொன்னால் மட்டுமே அவரால் பணம் சம்பாதிக்க முடியும்.

படக்குறிப்பு,

ஸ்டுடியோ-20யின் அறைக் கதவு மூடியிருந்தால் உள்ளே மாடல் வாடிக்கையாளருடன் தொடர்பில் உள்ளார் என்று பொருள்.

நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் வேலை செய்யும் லானா, மாதம் 4,000 யூரோ சம்பாதிக்கிறார். ரூமேனியர்களின் சராசரி மாத வருவாயைவிட, இது சுமார் 10 மடங்கு அதிகம். லானாவைப் பணியமர்த்தியுள்ள ஸ்டுடியோ-20 நிறுவனமும் அவர் மூலம் மாதம் 4,000 யூரோ ஈட்டுகிறது. வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, இணையத்தில் ஆபாசப் பங்களை வெளியிடும் லைவ்ஜேஸ்மின் (LiveJasmine) இணையதளம் மாதம் 8,000 யூரோ ஈட்டுகிறது.

லைவ்ஜேஸ்மின் உலகின் மிகப்பெரிய வெப்கேம் தொழில் செய்யும் இணையதளம். தினமும் 35 லட்சம் முதல் 40 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள அந்த இணையத்தளத்தில் எப்போதும் 2,000 மாடல்கள் ஆன்லைனில் பணியாற்றிக்கொண்டே இருப்பார்கள். 2016-ஆம் ஆண்டு மட்டும் இந்த வெப் கேம் தொழில் எப்படி இரண்டு பில்லியன் முதல் மூன்று பில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டியது என்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது.

பட்டப்படிப்பு முடித்துள்ள லானா 2008-இல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் தனது கட்டுமானத் துறை வேலையை இழந்தார். பொருளாதார வீழ்ச்சியால் ரூமேனியாவும் பாதிக்கப்பட்ட பின்னர், லானா இந்தத் தொழிலுக்கு வந்தார்.

பட மூலாதாரம், Studio 20

படக்குறிப்பு,

வாடிக்கையாளருடன் பாலியல் தவிர்த்த பிறவற்றையும் பேசுவது நல்லது என்கிறார் மேலாளர் ஆன்ரா.

"முதல் முறை வாடிக்கையாளர்கள் கேட்டது அதிர்ச்சியாக இருந்தது" என்றும், ஆனால் எந்த உறுப்பினர் பணம் தருவார் என்பதைப் புரிந்து கொண்டதாகவும், பணம் தராதவர்களுடன் ஆன்லைனில் நேரத்தை வீணாக்கக்கூடாது என்பதைப் புரிந்துகொண்டதாகவும் கூறுகிறார்.

உள்ளே என்ன நடக்கும் என்று கேட்டதற்கு, பெரும்பாலும் உரையாடல்கள் என்று கூறிய லானா, ஒரு குறைந்த நேரம் மட்டும் நிர்வாணம் மற்றும் சுய இன்பம் ஆகியவை இருக்கும் என்றும் கூறினார்.

"ஒரு பத்து நிமிடம் பாலியல் ரீதியாகப் பேசினாலும், உங்களுக்குப் பேச மற்ற விடயங்களும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், உறுப்பினர்கள் நீண்ட நேரம் ஆன்லைனில் இருக்க மாட்டார்கள்," என்று ஸ்டுடியோ-20 நிறுவனத்தின் தகவல் தொடர்பு மேலாளர், ஆன்ரா சிர்னோகோனு கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

அதற்காக பயிற்சியாளர், உளவியல் நிபுணர், ஆங்கில மொழிப் பயிற்சியாளர் ஆகியோரை அந்நிறுவனம் பணியமர்த்தியுள்ளது.பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து வருவதால் இது முக்கியமாகிறது.

ஆங்கில ஆசிரியர் ஆண்ட்ரியா, மொழியை மட்டுமல்லாமல், உளவியல், உடல்மொழி ஆகியவை பற்றியும் கற்றுத்தருகிறார்.

"இது ஒரு பாலியல் தொழில் மட்டுமல்ல. மாடல்கள் உறுப்பினர்களுடன் ஆன்லைன் மூலம் காதல் செய்பவர்கள்போல பேச வேண்டும். நிறைய விடயங்களைப் பற்றிப் பேசுவது இரு தரப்புக்கும் மனமகிழ்ச்சியைத் தரும்," என்கிறார் ஆண்ட்ரியா.

ரூமேனியாவில் ஒன்பது கிளைகளைக் கொண்டுள்ள ஸ்டுடியோ-20 நிறுவனம், ஒரு கிளையில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்காக ஆண் மாடல்களையும் கொண்டுள்ளது.

எல்லா மாடல்களும் ஸ்டுடியோவுக்கு வருவதில்லை. இரண்டு பல்கலைக்கழக பட்டங்களைப் பெற்றுள்ள சாண்டி பெல், உள்ளரங்க வடிவமைப்பு செய்வதுடன் இத்தொழில் மூலம், வீட்டில் இருந்தபடியே தினமும் 100 யூரோக்களை ஈட்டுகிறார்.

"பெரும்பாலானோர் அன்பையும் பிணைப்பையும் எதிர்பார்க்கிறார்கள். எனக்கு ஆண் நண்பர் இருப்பதும், அவருடன் நான் பாலியல் உறவு கொள்வதும் அவர்களுக்குத் தெரியும்," என்கிறார் பெல்.

படக்குறிப்பு,

வாடிக்கையாளருக்கு தினமும் குறுஞ்செய்தி அனுப்ப மாடல்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

புகாரெஸ்ட் நகரில் தன் நண்பருடன் வசிக்கும் பெல் அவருக்குத் தெரிந்தே இதைச் செய்கிறார். ஆனால் அவரின் பெற்றோருக்கு இது தெரியாது.

"ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள அந்த ஆண்கள் என்னை ஒன்றும் செய்ய முடியாது. அநாகரிகமாக நடந்துகொள்பவர்களின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, நிறுவனத்திடம் சொல்லி அவர்களைத் தடை செய்து விடுவேன், " என்கிறார் பெல்.

"பெண்கள் கட்டாயப்படுத்தி இதைச் செய்ய வைக்கப்படுகிறார்களா, விரும்பிச் செய்கிறார்களா, மன மாற்றம் செய்யப்பட்டு இவற்றைச் செய்ய வைக்கப்படுகிறார்களா, பொருளாதாரக் காரணங்களால் இத்தொழில் செய்கிறார்களா என்று அனைத்தையும் விவாதிக்க வேண்டும்," என்கிறார் பெண்ணியவாதியான ஐரினா இலிசெய்.

வளர் இளம் பருவத்தில் கருவுறுதல் அதிகாமாக இருப்பது, பட்டம் முடித்த 30% ரூமேனியர்களுக்கு வேலை கிடைக்காதது ஆகியவை முக்கியக் காரணிகள் என்கிறார் ஐரினா.

இளம் பெண்களை உள்ளே இழுக்க வெப்கேம் நிறுவனங்களும் நிறைய முயல்கின்றன. பல்கலைக்கழக வளாகங்களில் விளம்பரங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் செய்தி அனுப்புதல் என்று பல வழிகள் கையாளப்படுகின்றன.

இரண்டு ஆண்டுகளில் இத்தொழிலை விட்டு விலக நினைக்கும் 31 வயதான லானாவுக்கு அவரின் ஒரே மகளை ஆளாகவும், பிறவற்றில் முதலீடு செய்யவும் இந்தத் தொழில் உதவியுள்ளது.

தன் 16 வயதில் பாலியல் தொழிலில் இருந்து தப்பி வந்த, இப்போது 28 வயதாகும் ஓனாவின் ஆண் நண்பர் அவரை வெப்கேம் மூலம் பாலியல் தொழில் செய்யக் கட்டாயப்படுத்தியுள்ளார்.

படக்குறிப்பு,

சில பெண்கள் இத்தொழிலில் தள்ளப்படுவதாக பெண்ணியவாதியான ஐரினா நம்புகிறார்.

" முதலில் அவர் என்னை வாடிக்கையாளர்களிடம் ஆபாசமாகப் பேச மட்டுமே சொன்னார். பின்னர் அவரும் அறைக்குள் வந்தார். நாங்கள் ஆபாசப் படம் எடுத்தோம், " என்கிறார் ஓனா.

ரூமேனியாவில் ஆணும் பெண்ணும் இணைந்து வெப்கேமராவில் உறவாடுவது சட்டவிரோதம் எனும்போதும் அவை மீறப்படுகின்றன.

"கேமரா முன்பு பணம் சம்பாதிப்பது என்று நினைத்து பல இளம் பெண்கள் இத்துறையில் நுழைகிறார்கள். ஆனால், பல காரணிகளும் அவர்களின் மனங்களை மாற்றிவிடும். பாலியல் தொழில்தான் இதன் அடுத்த கட்டம்," என்கிறார் அவர்.

அதை மறுக்கும் லானா,"நீங்கள் உங்கள் மூளையைத்தான் விற்க வேண்டும், உடலை அல்ல. சில மாதங்கள் அல்லது சில நாட்களில் வெளியேறும் பெண்களும் உள்ளனர். எனக்கு எல்லைகள் உண்டு. நான் சுரண்டப்படுவதாக உணரவில்லை," என்கிறார்.

ஸ்டுடியோ-20 நிறுவனத்தின் தகவல் தொடர்பு மேலாளர், ஆன்ரா சிர்னோகோனு, "இது உளவியல் ரீதியாக பாதிக்கும் ஆபத்தான தொழில்," என்பதை மறுக்கிறார். "நாளுக்கு 12 மணி நேரம் வேலை செய்தும், குறைவாகப் பணம் சம்பாதிப்பதே உளவியல் பாதிப்புகளை உண்டாக்கும்," என்கிறார் அவர்.

ஆனால் மாடல்கள் தாங்கள் இந்தத் தொழில் செய்வதை பிறரிடம் மறைக்க விரும்புவது உண்மையை உணர்த்துகிறது. ஒருவேளை லானா மற்றும் சாண்டி பெல் ஆகியோருக்குத் தங்கள் படிப்பு மற்றும் பிற தொழில் அனுபவங்கள் மூலம் நல்ல வாழ்க்கை அமைந்திருந்தால், நியூ யார்க்கிலும், ஃபிரான்க்ஃபர்ட்டிலும், லண்டனிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்காகத் தங்கள் ஆடைகளை அவிழ்க முடிவு செய்திருப்பார்களா?

கொரோனா வைரஸ் பரவல் எல்லோரையும் வீட்டிலேயே முடக்கிப் போட்டுள்ளது. பாலியல் தொழிலாளர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

சொல்லப்போனால், கொரோனா வைரஸ் பரவுவதால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளவர்களும் அவர்களே.

இப்படியான சூழ்நிலையில் வாழ்வாதாரத்திற்காக அவர்களும் ஆன்லைன் மூலமாக தங்களது பணிகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளனர்.

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய பிரிட்டனைச் சேர்ந்த க்ளியோ, "நாடு முடக்கப்பட்டதால் எங்கள் வருமானம் பாதிக்கப்பட்டது. அதனால் ஆன்லைன் ப்ளாட்ஃபார்மை பயன்படுத்தத் தொடங்கினோம்," என்கிறார்.

பிபிசி தமிழில் 16 செப்டம்பர் 2017 வெளியான கட்டுரை இது

தற்போதைய நிலவரம்

கொரோனா வைரஸ் பரவல் எல்லோரையும் வீட்டிலேயே முடக்கிப் போட்டுள்ளது. பாலியல் தொழிலாளர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சித்தரிக்கும் படம்

சொல்லப்போனால், கொரோனா வைரஸ் பரவுவதால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளவர்களும் அவர்களே.

இப்படியான சூழ்நிலையில் வாழ்வாதாரத்திற்காக அவர்களும் ஆன்லைன் மூலமாக தங்களது பணிகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளனர்.

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய பிரிட்டனைச் சேர்ந்த க்ளியோ, "நாடு முடக்கப்பட்டதால் எங்கள் வருமானம் பாதிக்கப்பட்டது. அதனால் ஆன்லைன் ப்ளாட்ஃபார்மை பயன்படுத்தத் தொடங்கினோம்," என்கிறார்.

"இணையத்தில் உடலைக் காட்டுவதால் மட்டும் பணத்தை ஈட்டிவிடமுடியாது. இது கடினமான பணி," என்கிறார் மற்றொரு பாலியல் தொழிலாளியான க்ரேஸி.

கடந்த இரண்டு மாதங்களில் இதுபோன்ற பாலியல் தளங்களில், அவற்றின் பயன்பாட்டாளர்கள் பணம் செலவிடுவது அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக டென்மார்க்கில் அதிகம் செலவிடுகிறார்கள். அதற்கு அடுத்த இடங்களில் இஸ்ரேலும், பெல்ஜியமும் உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: