பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கியச் செய்திகள்

பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கியச் செய்திகள் படத்தின் காப்புரிமை Twitter

இன்று (வியாழக்கிழமை) பிபிசி தமிழ்.காமில் வெளியான செய்திகளில் முக்கியமானவற்றை தொகுத்து வழங்கியுள்ளோம்.

`டாபிங்` நடன சைகையை காட்டிய செளதி அரேபியாவின் பிரபல பாடகர் கைது

படத்தின் காப்புரிமை COPYRIGHTABDALLAH AL SHAHANI

இசை நிகழ்ச்சியின் போது, ஒரு கையினை மேல் நோக்கியும், மறு கையினால் முகத்தை மறைத்தும் செய்யப்படும் `டாபிங்` நடன சைகையை அப்தல்லா அல் ஷஹானி செய்துள்ளார். டாபிங் போதை பயன்பாட்டைக் குறிக்கிறது என செளதி அதிகாரிகள் கருதுவதால், அந்நாட்டு உள்துறை அமைச்சகம் சமீபத்தில் இதற்கு தடை விதித்தது.

செய்தியை படிக்க: தடை செய்யப்பட்ட நடன சைகையை காட்டிய செளதி அரேபிய பாடகர் கைது

`மெர்சல்` பாடல் வெளியீடு: 'தமிழர்களுக்கான பாடல்' என விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் புகழாரம்

படத்தின் காப்புரிமை Twitter

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்` படத்தில் இடம்பெற்றுள்ள `ஆளப்போறான் தமிழன்` என்ற பாடலின் வரிகள் இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ள நிலையில், இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளை வெகுவாக புகழ்ந்து பல விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

செய்தியை படிக்க: `மெர்சல்` பாடல் வெளியீடு: 'தமிழர்களுக்கான பாடல்' என விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் புகழாரம்

பொது இடங்களில் ஆபாச படங்கள் பார்ப்பது சரியா?

படத்தின் காப்புரிமை Getty Images

பெரும்பாலான மக்கள் இணையத்தில் ஆபாச படங்கள் பார்ப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. பொதுவாக மூடிய கதவுகளுக்குள் தான் இது நடக்கும்.

செய்தியை படிக்க: பொது இடங்களில் ஆபாச படங்கள் பார்ப்பது சரியா?

இரவில் பெண்கள் வெளியே நடமாட தடைபோடுவது சட்டமா, சமூகமா?

காரில் சென்று கொண்டிருந்த ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு, பாஜக பிரமுகரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம், இரவு நேரங்களில் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்பது குறித்த விவாதங்களை மீண்டும் தொடங்கி வைத்துள்ளது.

செய்தியை படிக்க: இரவில் பெண்கள் வெளியே நடமாட தடைபோடுவது சட்டமா, சமூகமா?

குட்டைப் பாவாடைக்கு கீழிருந்து புகைப்படம் எடுப்பவர்களுக்கு எதிராக போராடும் இளம்பெண்

ஜினா மார்ட்டின் லண்டனில் நடந்த இசைத் திருவிழாவினை ரசித்துக்கொண்டிருந்த போது, ஒரு நபர் ஜினாவின் குட்டைப் பாவாடையின் கீழே மொபைலை வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். இதனை அறிந்த அவர், நேரடியாக காவல்துறைக்கு சென்று புகார் கொடுத்தார்.

செய்தியை படிக்க: குட்டைப் பாவாடைக்கு கீழிருந்து எடுத்த புகைப்படம்: போராடும் இளம்பெண்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :