பிபிசி தமிழில் இன்று...பகல் 1 மணி வரை

யாருக்கில்லை தன்மானம்: நடிகர் கமல் ஹாசன் கருத்தால் வெடித்தது சர்ச்சை படத்தின் காப்புரிமை Facebook

இன்று (வெள்ளிக்கிழமை) பிபிசி தமிழ்.காமில் இதுவரை வெளியான செய்திகளில் முக்கியமானவற்றை தொகுத்து வழங்கியுள்ளோம்.

கமல் கருத்தால் வெடித்தது சர்ச்சை

முரசொலி நாளிதழின் பவளவிழாவில் பேசிய கமல், இந்த விழாவுக்கு வருவதால் தான் தி.மு.கவில் சேரப் போகிறேனா என்று பலரும் கேட்பதாகவும், சேர்வதாக இருந்தால் 1983ல் கருணாநிதி தனக்கு தந்தி மூலம் கட்சியில் சேர்கிறாயா என்று கேட்டபோதே சேர்ந்திருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்தியை படிக்க :''கமல் முரசொலி மேடையேறியது தற்காப்பு; ரஜினி கீழே அமர்ந்தது தன்மானம்''

இலங்கை: தொடங்கப்பட்ட நாளிலிருந்து மருத்துவர் இல்லாத வைத்தியசாலை

இலங்கையில் போருக்கு பின்னர் மீள்குடியேற்ற பிரதேசமொன்றில் ஜனாதிபதியினால் தொடங்கி வைக்கப்பட்ட அரசு வைத்தியசாலையொன்று திறக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரையில் நிரந்தர மருத்துவர் இன்றி காணப்படுகின்றது.

செய்தியை படிக்க :இலங்கை: தொடங்கப்பட்ட நாளிலிருந்து மருத்துவர் இல்லாத வைத்தியசாலை

நர மாமிசம் உண்ட பின்னர் எலும்பில் சித்திரம் வரைந்தார்களா?

படத்தின் காப்புரிமை TRUSTEES OF THE NHM

பிரிட்டனில் உள்ள ஒரு குகையில் கண்டுடெக்கப்பட்டுள்ள மனித எலும்பில் வரையப்பட்டுள்ள குறுக்கும் நெடுக்குமான கோடுகள் சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த நர மாமிசம் உண்ணும் சடங்குகளுக்கான ஆதாரங்கள் என்று தெரியவந்துள்ளது.

செய்தியை படிக்க :நர மாமிசம் உண்ட பின்னர் எலும்பில் சித்திரம் வரைந்தார்களா?

வார்த்தைப் போரின் "மூலமும்" வட கொரியாவின் தேவையும்

படத்தின் காப்புரிமை AFP

அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் வார்த்தைப் போரால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவை தீவிரமாக எதிர்க்க வட கொரியா கருதும் காரணத்தின் மூலத்தை ஆய்வு செய்து பிபிசி செய்தியாளர்கள் வழங்கியுள்ள கட்டுரை.

செய்தியை படிக்க :வார்த்தைப் போரின் "மூலமும்" வட கொரியாவின் தேவையும்

உசைன் போல்ட்: 8 முறை ஒலிம்பிக் சாம்பியனின் சாதனை பயணம் (9.58 வினாடிகள்) வரைபடங்களில்

அனைத்து காலகட்டங்களிலும், அதி சிறந்த ஓட்டப்பந்தய வீரர் என்று உலகெங்கும் பரவலாக உசைன் போல்ட் ஏற்றுக் கொள்ளப்பட்டார். உசைன் போல்ட் ஓய்வுபெறவுள்ள நிலையில், அவர் ஏன் ஒரு சாதனையாளராக கருதப்படுகிறார் என்பதையும், அவர் எவ்வாறு சாதனை நிகழ்த்தினார் என்பதும் இங்கே விளக்கப்பட்டுள்ளது.

செய்தியை படிக்க :உசைன் போல்ட்: 8 முறை ஒலிம்பிக் சாம்பியனின் சாதனை பயணம் வரைபடங்களில்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பறிக்க முயற்சி நடக்கிறதா? கொப்பளிக்கும் எதிர்ப்பு

படத்தின் காப்புரிமை Empics

காஷ்மீரில் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டவிதியை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள மனு, சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 1947ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைந்த பிறகு இந்தச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

செய்தியை படிக்க :காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பறிக்க முயற்சி நடக்கிறதா?

யூ டியூப், டி.வி.க்கு போட்டியாக ஃபேஸ்புக் வீடியோ சேவை அறிமுகம்

படத்தின் காப்புரிமை FACEBOOK

சமூக ஊடகங்களில் மிக முக்கிய நிறுவனமான ஃபேஸ்புக் அடுத்தகட்ட நகர்வாக, யூ டியூப் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு போட்டியாக காணொளி வெளியிடும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் பயனாளர்கள் மிக விரைவில் பல வகையான காணொளிகளை வாட்ச் டேப் மூலம் பார்க்க இயலும்

செய்தியை படிக்க : யூ டியூப், டி.வி.க்கு போட்டியாக ஃபேஸ்புக் வீடியோ சேவை அறிமுகம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :