பிபிசி தமிழில் இன்று... மாலை 6 மணி வரையான முக்கியச் செய்திகள்

ரூமேனியா

இன்று (வெள்ளிக்கிழமை) பிபிசி தமிழில் இதுவரை வெளியான செய்திகளில் முக்கியமானவற்றை தொகுத்து வழங்கியுள்ளோம்.

`கருணாநிதி என்ற ஆளுமையின் அம்சமாக விளங்கிய முரசொலி'

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அந்த நாளிதழின் இத்தனை ஆண்டுகாலப் பயணத்தை விளக்கும் வகையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கும் கண்காட்சியின் சிறம்பம்சங்கள் என்ன? தி.மு.கவின் அரசியல் நிலைப்பாடுகள், கொள்கைகள், போன்றவற்றை தொண்டர்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்ததில் முரசொலியின் பங்கு என்ன?

செய்தியை படிக்க:கட்சிக்கு அப்பாற்பட்டு முரசொலி நாளிதழின் சமூக பங்கு என்ன?

பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உதயசந்திரனை இடமாற்றம் செய்ய இடைக்காலத் தடை

பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உதயசந்திரனை இடமாற்றம் செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழக பள்ளிக்கூடங்களின் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் குழுவில் உள்ளவர்களையும் மாற்றக்கூடாது எனவும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

செய்தியை படிக்க:பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உதயசந்திரனை இடமாற்றம் செய்ய இடைக்காலத் தடை

கேம்-கேர்ள்ஸ் - ரூமேனியாவின் இணையவழிப் பாலியல் தொழில்: உள்ளே நடப்பது என்ன?

படத்தின் காப்புரிமை Getty Images

சர்வதேச அளவில் ஆபாசப் படத் துறையில் வெப் கேமராக்கள் வழியாக பாலியல் ரீதியாக உறவாடுவது இப்போது மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. ரூமேனியாவில் "கேம் கேர்ள்ஸ்" (cam-girls) என்று அழைக்கப்படும் ஆயிரக்கணக்கான பெண்கள் இணைய வழியாக வாடிக்கையாளர்களுடன் உறவாடுகின்றர்.

செய்தியை படிக்க: ரூமேனியாவின் இணையவழிப் பாலியல் தொழில்: உள்ளே நடப்பது என்ன?

முதல் முறையாக இலங்கையில் குப்பையில் இருந்து மின்சார உற்பத்தி

படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கையில் முதல் முறையாக குப்பைகளைப் பயன்படுத்தி, மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் நிலையம் அமைக்கும் நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.தென் கொரிய நிறுவனமொன்றுடன் இணைந்து அமைக்கப்படும் இந்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்களுக்காக 27 பில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.

செய்தியை படிக்க: முதல் முறையாக இலங்கையில் குப்பையில் இருந்து மின்சார உற்பத்தி

நர மாமிசம் உண்ட பின்னர் எலும்பில் சித்திரம் வரைந்தார்களா?

படத்தின் காப்புரிமை TRUSTEES OF THE NHM

பிரிட்டனில் உள்ள ஒரு குகையில் கண்டுடெக்கப்பட்டுள்ள மனித எலும்பில் வரையப்பட்டுள்ள குறுக்கும் நெடுக்குமான கோடுகள் சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த நர மாமிசம் உண்ணும் சடங்குகளுக்கான ஆதாரங்கள் என்று தெரியவந்துள்ளது.

செய்தியை படிக்க :நர மாமிசம் உண்ட பின்னர் எலும்பில் சித்திரம் வரைந்தார்களா?

வார்த்தைப் போரின் "மூலமும்" வட கொரியாவின் தேவையும்

படத்தின் காப்புரிமை AFP

அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் வார்த்தைப் போரால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவை தீவிரமாக எதிர்க்க வட கொரியா கருதும் காரணத்தின் மூலத்தை ஆய்வு செய்து பிபிசி செய்தியாளர்கள் வழங்கியுள்ள கட்டுரை.

செய்தியை படிக்க :வார்த்தைப் போரின் "மூலமும்" வட கொரியாவின் தேவையும்

உசைன் போல்ட்: 8 முறை ஒலிம்பிக் சாம்பியனின் சாதனை பயணம் (9.58 வினாடிகள்) வரைபடங்களில்

அனைத்து காலகட்டங்களிலும், அதி சிறந்த ஓட்டப்பந்தய வீரர் என்று உலகெங்கும் பரவலாக உசைன் போல்ட் ஏற்றுக் கொள்ளப்பட்டார். உசைன் போல்ட் ஓய்வுபெறவுள்ள நிலையில், அவர் ஏன் ஒரு சாதனையாளராக கருதப்படுகிறார் என்பதையும், அவர் எவ்வாறு சாதனை நிகழ்த்தினார் என்பதும் இங்கே விளக்கப்பட்டுள்ளது.

செய்தியை படிக்க :உசைன் போல்ட்: 8 முறை ஒலிம்பிக் சாம்பியனின் சாதனை பயணம் வரைபடங்களில்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பறிக்க முயற்சி நடக்கிறதா? கொப்பளிக்கும் எதிர்ப்பு

படத்தின் காப்புரிமை Empics

காஷ்மீரில் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டவிதியை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள மனு, சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 1947ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைந்த பிறகு இந்தச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

செய்தியை படிக்க :காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பறிக்க முயற்சி நடக்கிறதா?

யூ டியூப், டி.வி.க்கு போட்டியாக ஃபேஸ்புக் வீடியோ சேவை அறிமுகம்

படத்தின் காப்புரிமை FACEBOOK

சமூக ஊடகங்களில் மிக முக்கிய நிறுவனமான ஃபேஸ்புக் அடுத்தகட்ட நகர்வாக, யூ டியூப் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு போட்டியாக காணொளி வெளியிடும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் பயனாளர்கள் மிக விரைவில் பல வகையான காணொளிகளை வாட்ச் டேப் மூலம் பார்க்க இயலும்

செய்தியை படிக்க : யூ டியூப், டி.வி.க்கு போட்டியாக ஃபேஸ்புக் வீடியோ சேவை அறிமுகம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :