பிபிசி தமிழில் இன்று சனிக்கிழமை வெளியான முக்கிய செய்திகள்

  • 12 ஆகஸ்ட் 2017

இன்று (சனிக்கிழமை) பிபிசி தமிழில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வெனிசுவேலா நாட்டின் எதிர்க்கட்சிகளின் போராட்டம்

வெனிசுவேலாவில் நிலவும் சிக்கலைக் கையாள ராணுவ நடவடிக்கையைப் புறந்தள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

செய்தியை வாசிக்க: வெனிசுவேலா மீது ராணுவ நடவடிக்கை: மிரட்டும் டிரம்ப்

Image caption சஃபியா இழந்த வீடு

பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி தொடரின் ஒரு பகுதி.

செய்தியை வாசிக்க: பிரிவினை: 70 வருடங்களுக்கு பிறகு மூதாதையரின் வீட்டை பார்த்த பாகிஸ்தான் பெண்

படத்தின் காப்புரிமை Elmira Police Department
Image caption ஹரியட் ஹாய்ட்

வார விடுமுறை நாட்களில் நண்பரை பார்ப்பதற்காக வெளியூர் சென்ற இளம்பெண் ஒருவர், தனது பச்சிளம் குழந்தையை பிளாஸ்டிக் பைக்குள் வைத்து புதருக்கடியில் விட்டுச் சென்றுள்ளார்.

செய்தியை வாசிக்க: நண்பரை சந்திப்பதற்காக பச்சிளம் குழந்தையை புதருக்கடியில் விட்டுச் சென்ற தாய்!

தமிழகத்தில் ஆளும் அதிமுக, பலவீனமான நிலையை நோக்கிச் செல்கிறது என்று மாநிலத்தில் அரசியல் விவகாரங்களை உற்று கவனித்து வரும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

செய்தியை வாசிக்க: தலைமையின்றி பலவீனம் அடைகிறதா அதிமுக?

வனப்பகுதியில் இருந்து கிராமங்களுக்குள் நுழையும் யானைகள் மற்றும் பிற வனவிலங்குகளை எளிதில் மீட்க ஹைட்ராலிக் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை தமிழக வனத்துறை வடிவமைத்துள்ளது.

செய்தியை வாசிக்க: வனவிலங்குகளை மீட்க ஹைட்ராலிக் ஆம்புலன்ஸை வடிவமைத்த தமிழக வனத்துறை

படத்தின் காப்புரிமை CAIR
Image caption கிர்ஸ்டி பவல்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் காவல் துறையால் கட்டாயப்படுத்தப்பட்டு ஹிஜாப் அகற்றப்பட்ட இஸ்லாமியப் பெண்ணுக்கு 85,000 டாலர் (சுமார் 55 லட்சம் இந்திய ரூபாய்) இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

செய்தியை வாசிக்க: முஸ்லிம் பெண்ணின் ஹிஜாபை கட்டாயப்படுத்தி அகற்றியதற்காக 85000 டாலர் நஷ்டஈடு

படத்தின் காப்புரிமை SAMEERATMAJ MISHRA

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்திலுள்ள பிஆர்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் வார்டு எண் 100-ஐ யாருக்குதான் தெரியாது?

செய்தியை வாசிக்க: கோரக்பூர்: பல உயிர்களை பலி வாங்கிய மருத்துவமனையில் பதட்டத்துடன் பெற்றோர்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
விமானியே இல்லாமல் விமானத்தை இயக்க தயாராகும் நிறுவனம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :