அமெரிக்க நகரில் மோதல்: தீவிர வலதுசாரி குழுவினை டிரம்ப் கண்டிக்கவில்லை என புகார்

சார்லொட்டஸ்வில்லே மோதல் படத்தின் காப்புரிமை Reuters

அமெரிக்காவின் சார்லட்ஸ்வில் நகரில் சனிக்கிழமையன்று நடந்த மோதல் குறித்து தீவிர வலதுசாரி குழுவினை, வெளிப்படையாகக் கண்டிக்க தவறியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சிக்கப்படுகிறார்.

இனவாத எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காரை ஏற்றி ஒருவரைக் கொன்றதாக, 22 வயது இளைஞர் மீது குற்றம்சாட்டப்படுகிறது.

சந்தேகத்துக்குரிய அந்த இளைஞர் வலதுசாரி குழுவினர் நடத்திய பேரணியில் பங்கேற்றிருக்கிறார். டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்து வலதுசாரி குழுவினர் எழுச்சியடைந்துள்ளதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

வெள்ளை மேலாதிக்கவாதத்தின் அவமானகரமான யதார்த்தத்தை அதிபர் அலட்சியம் செய்துள்ளதாக ஜனநாயக கட்சியின் நான்சி பேலோசி கூறியுள்ளார்.

வெள்ளை இனவாதத்தால் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் என இச்சம்பவத்தைப் பற்றி அதிபர் கூற வேண்டும் என நாடு எதிர்பார்ப்பதாகக் குடியரசு சென்டர் மார்க்கோ ரூபோய் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :