பிபிசி தமிழில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான முக்கிய செய்திகள்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிபிசி தமிழில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை EPA

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் உசைன் போல்ட் கலந்து கொண்ட கடைசி போட்டியில் அவருக்கு எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டு ஓட முடியாமல் போனதற்கான காரணங்கள் குறித்து அவரது சக நாட்டு வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செய்தியை வாசிக்க: அதிர்ச்சியில் முடிந்த உசைன் போல்டின் சாதனை பயணம்: காரணம் என்ன?

படத்தின் காப்புரிமை EGENESIS

உலகில் தற்போது நடைமுறையில் உள்ள நிறைய மரபணு மாற்றங்கள் செய்யப்பட்ட விலங்குகள் பெரும்பாலும் உடல் உறுப்பு மாற்றுக்கான பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

செய்தியை வாசிக்க: மனித இனத்தை காக்கப்போகும் மரபணு மாற்றப்பட்ட பன்றிகளின் உடலுறப்புகள்

படத்தின் காப்புரிமை ANTARCTIC HERITAGE TRUST

அண்டார்க்டிக் ஹெரிடேஜ் ட்ரஸ்ட் என்ற அமைப்பு, அண்டார்டிகா பகுதியில் 106 ஆண்டுகள் பழமையான பழ கேக் ஒன்றினை கண்டெடுத்துள்ளனர். அண்டார்டிகாவின் கேப் அடேர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்த கேக், பரிட்டனை சேர்ந்த ஆய்வுப்பயணியான ராபர்ட் ஃபால்கோன் ஸ்காட்க்கு சொந்தமானது என நம்பப்படுகிறது.

செய்தியை வாசிக்க: 106 ஆண்டுகள் பழமையான 'பழ கேக்' அண்டார்டிகாவில் கண்டெடுப்பு

லண்டனை மையமாக கொண்ட சரசென்ஸ் கிளப் என்ற ரக்பி அணி, பந்தை பாஸ் செய்யும் பயிற்சியை வித்தியாசமான முறையில் செய்கின்றனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நீச்சல் குளத்தில் ரக்பி பயிற்சி; மெய்சிலிர்க்க வைக்கும் காணொளி

இலங்கையில் மிருகங்களை வேட்டையாட மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருளை கடித்ததால் காயமுற்ற 4 வயதான காட்டு யானையொன்று தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக உள்நாட்டு ஆங்கில ஊடகமான ''த சன்டே ரைம்ஸ்'' தெரிவித்துள்ளது.

செய்தியை வாசிக்க: இலங்கை: வெடி பொருளில் சிக்கி உயிருக்கு போராடும் 4 வயது யானை

படத்தின் காப்புரிமை Getty Images

ஆகஸ்ட் மாதம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சென்னையில் பழைய மெட்ராஸ் நகரத்தின் பிறந்த தினத்தை கொண்டாடுகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு நடைபயணம், சென்னை நகரத்தின் தொன்மை குறித்த கருத்தரங்கங்கள், திரைப்பட நிகழ்வுகள், புகைப்பட கண்காட்சிகள், மாணவர்களுக்குப் போட்டிகள் என பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

செய்தியை வாசிக்க: சென்னைக்கு வயசு எத்தனை?

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவின் பொருளாதார வலிமையின் சின்னமாகத் திகழும், அதன் நாணயமான டாலரின் மதிப்பு சமீபத்தில் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சி கண்டபோது, டாலரும் வலிமை அடைந்தது.

செய்தியை வாசிக்க: அமெரிக்க டாலர் ஏன் சரிகிறது?

படத்தின் காப்புரிமை Getty Images

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் அறுபது குழந்தைகளின் இறப்புக்குக் காரணம் ஆக்சிஜன் விநியோகம் தடை பட்டதால் அல்ல என்றும், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் அப்பகுதியில் நிலவும் என்சிபாலிட்டிஸ் எனப்படும் மூளை வீக்க நோய் மற்றும் பிற காரணங்களால் இறந்தார்கள் என்றும், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சித்தார்த்நாத் சிங் கூறியுள்ளார்.

செய்தியை வாசிக்க: கோரக்பூர் குழந்தைகள் மரணத்திற்கு குறைப் பிரசவம் காரணம்: உ.பி அமைச்சர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்