குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருளால் தீ மற்றும் மூச்சு திணறல் அபாயம்?

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க அரசாங்கத்தை சேர்ந்த குழு ஒன்று, தீப்பிடிக்கும் சம்பவங்களை தொடர்ந்து விளையாட்டுப் பொருளானபேட்டரியால் இயங்கும் ஃபிட்ஜெட் ஸ்பின்னர்களுக்கென பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

சி பி எஸ் சி எனப்படும் அமெரிக்காவின் நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம், இரவு முழுவதும் விளையாட்டு பொருட்களை சார்ஜ் ஏற்றுவதை தவிர்க்குமாறு கூறுகிறது. அதிலும் முக்கியமாக புளூ டூத் வசதியுள்ள விளையாட்டு பொருட்களும் இதில் அடங்கும்.

எந்த வகையான ஃபிட்ஜெட் ஸ்பின்னர்களாக இருந்தாலும் அவைகளை வாயில் போடக்கூடாது என்று அனைத்து வயது குழந்தைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிபிசியின் சமீபத்திய ஆய்வு ஒன்று, பிரிட்டனில் விற்கப்படும் பாதுகாப்பற்ற விளையாட்டு பொருட்கள் குறித்து கண்டறிந்துள்ளது.

எனினும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மன அழுத்தத்தை குறைக்கும் நிவாரணியாகவும், பிரபலமாகவும் பார்க்கப்படும் ஃபிட்ஜெட் ஸ்பின்னர்கள் இதுபோன்ற விபத்துக்களுக்கு காரணமாகவும் இருந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

''பிட்ஜெட் ஸ்பின்னர் பயன்பாட்டாளர்கள் அல்லது அதனை வாங்கப்போகிறவர்கள் இருதரப்பினர்களும் சில முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டும்,'' என்று சி பி எஸ் சியின் தாற்காலிக தலைவரான ஆன் மேரி பர்கிலே அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

''சிறிய வயது குழந்தைகளிடமிருந்து அதனை தூரத்தில் வையுங்கள். பிளாஸ்டிக் மற்றும் உலோகங்களான ஸ்பின்னர்கள் உடைந்துவிட்டால் சிறிய அளவிலான துண்டுகளை வெளியிடும். அதுவே தீங்கிழைக்கும் அபாயமாக இருக்கலாம். வயதுவந்த குழந்தைகள் ஃபிட்ஜெட் ஸ்பின்னர்களை வாயில் போட கூடாது.'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் ஃபிட்ஜெட் ஸ்பின்னர்களை விற்கும் போது 12 வயது மேற்பட்டோருக்கு மட்டுமே விற்க வேண்டும் என்றும், ஃபிட்ஜெட் ஸ்பின்னர்கள் அமெரிக்க விளையாட்டு பொருட்களுக்கான ஏ எஸ் டி எம் எஃப்963-16 தர சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என்றும் சி பி எஸ் சி ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

தீப்பிடிக்கும் அபாயங்கள்

கடந்த ஜூன் மாதம் ஆலபாமாவில், ஒரு குடும்பம் வாழ்ந்து வந்த வீட்டில், புளூடூத் வசதி கொண்ட இசை எழுப்பும் ஃபிட்ஜெட் ஸ்பின்னர் ஒன்று சுமார் 45 நிமிடங்களுக்கு சார்ஜ் ஏற்றப்பட்டதை தொடர்ந்து வெடித்து சிதறியது. அந்த வீட்டிலிருந்து தரை விரிப்பில் தீக்கிரையான ஃபிட்ஜெட் ஸ்பின்னர் சிறிய தீ சேதத்தை உருவாக்கியது.

தொடர்ந்து மே மாதத்தில், அரைமணி நேரத்திற்கும் குறைவான அளவிற்கு சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரியில் இயங்கும் ஃபிட்ஜெட் ஸ்பின்னர் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாக மிச்சிகனில் உள்ள உள்ளூர் தொலைக்காட்சி நிலையமான என் பி சி 25 நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தீப்பிடித்து எரிந்த ஃபிட்ஜெட் ஸ்பின்னர் சார்ஜரின்றி விற்கப்பட்டுள்ளது. அதனால், குடும்பத்தினர் வேறொரு ஃபிட்ஜெட் ஸ்பின்னரின் சார்ஜரை பயன்படுத்தியுள்ளனர்.

''பேட்டரியால் இயங்கும் பிற பொருட்களை போன்று வாடிக்கையாளர்கள் தங்கள் கருவிகளை சார்ஜ் ஏற்றும்போது சற்று கவனமுடன் இருக்க வேண்டும்,'' என்கிறார் ஆன் மேரி பர்கிலே.

''ஃபிட்ஜெட் ஸ்பின்னருடன் வரும் சார்ஜிங் கேபிள்களையோ அல்லது சரியான பிற தொடர்பு கேபிள்களையோ இதற்கு பயன்படுத்த வேண்டும். காரணம், கருவியுடன் வரும் சார்ஜிங் கேபிள்கள் ஒன்றோடொன்று மாற்றத்தக்கதல்ல.'' என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்