பிபிசி தமிழில் இன்று...மாலை 6 மணி வரை

இன்று (திங்கட்கிழமை) பிபிசி தமிழில் மாலை வரை வெளியான செய்திகளில் முக்கியமானவற்றை தொகுத்து வழங்கியுள்ளோம்.

படத்தின் காப்புரிமை YOUTUBE/VOICEOFRAM

பாகிஸ்தான் தேசிய கீதத்தைப் பாடி காணொளி வெளியிட்ட இந்தியாவை சேர்ந்த இசைக் குழுவை, பாகிஸ்தானின் முன்னணி ஊடகங்களும், சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களும் பாராட்டி வருகின்றனர்.

செய்தியை படிக்க:பாகிஸ்தானியர்களின் மனதை வென்ற இந்திய இசைக்குழு

படத்தின் காப்புரிமை TNDIPR

தமிழகத்தில், ஆளும் அதிமுகவில் இரு வேறு அணிகளாக செயல்பட்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணையக் கூடும் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோதியை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசியுள்ளார்.

செய்தியை படிக்க: எடப்பாடி- ஓபிஎஸ் அணிகள் இணையுமா? மோதி- பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்காக தேசிய தகுதித் தேர்விலிருந்து (நீட்) இந்த ஆண்டு மட்டும் விலக்களிக்கக்கூடிய அவசரச் சட்டம் தற்போது மத்திய அரசிடம் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், நிரந்தமாக நீட் தேர்விலிருந்து விலக்கு தேவை என்ற குரல் வலுவாக ஒலிக்கிறது.

செய்தியை படிக்க:நீட் தேர்வு தொடர்பான அவசரச் சட்டம் போதுமானதா?

படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கையில் நடைபெற வேண்டிய தேர்தல்கள் உரிய நேரத்தில் நடைபெறாமல் அரசாங்கத்தினால் ஒத்தி வைக்கப்படுவது குறித்து தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய வருத்தம் வெளியிட்டுள்ளார்.

செய்தியை படிக்க:இலங்கை: தேர்தல் ஒத்திவைப்பு குறித்து தேர்தல் ஆணைய தலைவர் வருத்தம்

படத்தின் காப்புரிமை YOUTUBE/VOICEOFRAM

"அமைதி கீதம்" என்று அழைக்கப்படும் இந்த புதிய பாடல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் பாடகர்களால் பாடப்பட்டுள்ளது. இரு நாட்டிற்குமான அமைதியை ஆதரிக்கும் முகநூல் குழுவான `வாய்ஸ் ஆஃப் ராம்` குழு இதனை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளது.

செய்தியை படிக்க:வைரலான இந்திய - பாகிஸ்தான் ஒற்றுமையை போற்றும் ’அமைதி கீதம்’

படத்தின் காப்புரிமை Getty Images

நீட் தேர்வு விவகாரத்தில், தமிழக அரசு முறையான அவசர சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசை அணுகினால், இந்த ஒரு ஆண்டிற்கு (நடப்பாண்டு) நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைக்கும் என மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.

செய்தியை படிக்க:நீட் தேர்வுக்கு தற்காலிக விலக்கு மட்டுமே; குழப்பத்தில் மாணவர்கள்?

படத்தின் காப்புரிமை KAYLEY OLSSON

மனநிலையில் பாதிப்பிருந்தால் நமக்கு அழகு குறித்த சிந்தனைகள் பெரிதாக வருவதில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் ஒருவர், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பதின்ம வயது பெண் ஒருவரின் கதையை பதிவிட, அது சமூக ஊடகத்தில் பெரிதும் பகிரப்பட்டுள்ளது.

செய்தியை படிக்க:மன அழுத்தம் கொண்டவருக்கு அலங்காரம்: சிகை அலங்கார நிபுணருக்கு குவிந்த பாராட்டு

படத்தின் காப்புரிமை Getty Images

வைட்டமின் பி3 உட்கொள்வதால் கருச்சிதைவு, பிறப்புக் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் குறையலாம் என்று எலிகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

செய்தியை படிக்க:வைட்டமின் பி3 உட்கொண்டால் கருச்சிதைவு, பிறப்புக் குறைபாடு வாய்ப்புகள் குறையும் - ஆய்வு

படத்தின் காப்புரிமை Getty Images

பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளான நிலையில், பிரிட்டன் இந்தியாவிடம் ஒரு மிக நெருக்கமான வர்த்தக உறவை எதிர்பார்க்கிறது. ஆனால், பிரிட்டன் பற்றி நவீன இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்?

செய்தியை படிக்க:இந்தியாவின் 70-ஆவது சுதந்திர தினம்: பிரிட்டனை பற்றி இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்?

படத்தின் காப்புரிமை ALEX ROTAS

உலகின் மிக சிறந்த தடகள வீரர்கள் லண்டனில் கொண்டாடப்படும் வேளையில், அவர்களுடைய பழைய சகாக்கள் டென்மார்க்கில் நடைபெற்ற போட்டியை முடித்துவிட்டு ஊர் திரும்புகின்றனர் என்பது வெகு சிலருக்கே தெரியும். ஆனால், இந்த இருதரப்பினரும் தங்களது வயது என்ற விஷயத்தில் மட்டும் முற்றிலும் எதிரெதிராக இருந்தாலும், விளையாட்டின் மீதான ஈடுபாடு, மகிழ்ச்சி மற்றும் மன உறுதி ஆகியவற்றில் ஒருதரப்பினருக்கு மற்றொருவர் சளைத்தவர்களல்ல.

புகைப்படங்களை பார்க்க:முதுமையை வென்ற விளையாட்டு வீரர்கள் (புகைப்படத் தொகுப்பு)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :