பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகள்

இன்று (திங்கள் கிழமை) பிபிசி தமிழில் வெளியான செய்திகளில் முக்கியமானவற்றை தொகுத்து வழங்கியுள்ளோம்.

படத்தின் காப்புரிமை AIADMK

'ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடுங்கள்': டிடிவி தினகரன்

ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.

செய்தியை படிக்க: 'ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடுங்கள்': டிடிவி தினகரன்

படத்தின் காப்புரிமை TNDIPR

தமிழகத்தில், ஆளும் அதிமுகவில் இரு வேறு அணிகளாக செயல்பட்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணையக் கூடும் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோதியை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசியுள்ளார்.

செய்தியை படிக்க: எடப்பாடி- ஓபிஎஸ் அணிகள் இணையுமா? மோதி- பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்காக தேசிய தகுதித் தேர்விலிருந்து (நீட்) இந்த ஆண்டு மட்டும் விலக்களிக்கக்கூடிய அவசரச் சட்டம் தற்போது மத்திய அரசிடம் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், நிரந்தமாக நீட் தேர்விலிருந்து விலக்கு தேவை என்ற குரல் வலுவாக ஒலிக்கிறது.

செய்தியை படிக்க:நீட் தேர்வு தொடர்பான அவசரச் சட்டம் போதுமானதா?

படத்தின் காப்புரிமை YOUTUBE/VOICEOFRAM

"அமைதி கீதம்" என்று அழைக்கப்படும் இந்த புதிய பாடல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் பாடகர்களால் பாடப்பட்டுள்ளது. இரு நாட்டிற்குமான அமைதியை ஆதரிக்கும் முகநூல் குழுவான `வாய்ஸ் ஆஃப் ராம்` குழு இதனை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளது.

செய்தியை படிக்க:வைரலான இந்திய - பாகிஸ்தான் ஒற்றுமையை போற்றும் ’அமைதி கீதம்’

படத்தின் காப்புரிமை KAYLEY OLSSON

மனநிலையில் பாதிப்பிருந்தால் நமக்கு அழகு குறித்த சிந்தனைகள் பெரிதாக வருவதில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் ஒருவர், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பதின்ம வயது பெண் ஒருவரின் கதையை பதிவிட, அது சமூக ஊடகத்தில் பெரிதும் பகிரப்பட்டுள்ளது.

செய்தியை படிக்க:மன அழுத்தம் கொண்டவருக்கு அலங்காரம்: சிகை அலங்கார நிபுணருக்கு குவிந்த பாராட்டு

படத்தின் காப்புரிமை Getty Images

பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளான நிலையில், பிரிட்டன் இந்தியாவிடம் ஒரு மிக நெருக்கமான வர்த்தக உறவை எதிர்பார்க்கிறது. ஆனால், பிரிட்டன் பற்றி நவீன இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்?

செய்தியை படிக்க:இந்தியாவின் 70-ஆவது சுதந்திர தினம்: பிரிட்டனை பற்றி இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்