பிபிசி தமிழில் இன்று...மாலை 6 மணி வரை

  • 15 ஆகஸ்ட் 2017

இன்று (செவ்வாய்க்கிழமை ) பிபிசி தமிழில் மாலை 6 மணி வரை வெளியான செய்திகளில் முக்கியமானவற்றை தொகுத்து வழங்கியுள்ளோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

பாகிஸ்தான் தமது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 14ம் தேதி கொண்டாடும்போது, இந்தியா அடுத்த நாளான ஆகஸ்டு 15 அன்று ஏன் கொண்டாடுகிறது? பிரிட்டனிடமிருந்து ஒரே நாளில் சுதந்திரம் கிடைத்தாலும், ஒன்றாக இருந்து இரண்டாக பிரிந்த இரு நாடுகளில் ஏன் வெவ்வேறு நாட்களில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது?

செய்தியை படிக்க: பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு முதலில் சுதந்திரம் கொடுக்கப்பட்டதா?

ஒரு முதல்வரின் கீழ் தவறுகளும் ஊழல்களும் நிகழ்ந்தால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும்; தமிழகத்தில் பெரும் குற்றங்கள் நடந்தும் மாநில முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டுமென எந்தக் கட்சியும் கோரிக்கை விடுக்காதது ஏன் என நடிகர் கமல்ஹாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

செய்தியை படிக்க: தமிழக முதல்வரை யாரும் ராஜிநாமா செய்ய கோராதது ஏன்?: கமல்ஹாசன்

இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

செய்தியை படிக்க:இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன பதவியேற்பு

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க அரசாங்கத்தை சேர்ந்த குழு ஒன்று, தீப்பிடிக்கும் சம்பவங்களை தொடர்ந்து விளையாட்டுப் பொருளானபேட்டரியால் இயங்கும் ஃபிட்ஜெட் ஸ்பின்னர்களுக்கென பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

செய்தியை படிக்க:குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருளால் தீ மற்றும் மூச்சு திணறல் அபாயம்?

படத்தின் காப்புரிமை HBO

மிகவும் பிரபலான "கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொலைக்காட்சி தொடரின் ஒரு கதையை அது ஒளிபரப்பாகும் முன்பே கசிந்தது தொடர்பாக சந்தேகத்தின்பேரில் நான்கு பேரை இந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

செய்தியை படிக்க: "கேம் ஆஃப் த்ரோன்ஸ்" தொலைக்காட்சி தொடர் கசிவு: மும்பையில் நால்வர் கைது

படத்தின் காப்புரிமை AIADMK

இந்தியா தமது 70 ஆண்டுகால சுதந்திரத்தைக் கொண்டாடி வரும் நிலையில் தில்லியில் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய மோதி, காஷ்மீர் பிரிவினைவாதிகள் ரகசியத் திட்டத்தோடு செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

செய்தியை படிக்க: குண்டுகளும் வசைகளும் காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவராது: மோதி சுதந்திர தின உரை

படத்தின் காப்புரிமை Reuters

அமெரிக்காவின் பசிபிக் பிராந்தியமான குவாம் தீவு மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் திட்டம் குறித்து வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆய்வு நடத்தியதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

செய்தியைப் படிக்க: வடகொரியாவின் தாக்குதல் திட்டத்தை ஆய்வு செய்தார் கிம் ஜாங்-உன்

படத்தின் காப்புரிமை Huw Evans picture agency

காட்டு யானைகளின் பாதுகாப்புக் கருதி, ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் அவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்க இலங்கை வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

செய்தியை படிக்க: காட்டு யானைகள் நடமாட்டம் ஜி.பி.எஸ். மூலம் கண்காணிப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

டோக்லாம் அல்லது டோகா லாவில் பதற்றத்திற்கான உண்மையான காரணம் என்ன? பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பிற்கு முன் இந்த பதற்றங்கள் தொடங்கியதா?

செய்தியைப் படிக்க: இந்தியா-சீனா பதற்றத்தின் பின்னணி என்ன?

படத்தின் காப்புரிமை Reuters

மிக முக்கியமான பழுது நீக்கும் வேலைகள் நடைபெற இருப்பதால், வரும் 2021-ஆம் ஆண்டு வரை லண்டனின் மிகப்பிரபலமான பிக் பென் கடிகாரத்தின் மணி ஓசை ஒலிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியைப் படிக்க: 157 ஆண்டுகள் தொடர்ந்து ஒலித்த லண்டன் பிக்பென் கடிகாரத்துக்கு 4 ஆண்டு ஓய்வு!

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்