கடத்தப்பட்ட சவுதி இளவரசர்கள் - பிபிசியின் புலனாய்வு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கடத்தப்பட்ட சவுதி இளவரசர்கள் - பிபிசியின் புலனாய்வு

அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் முக்கிய கூட்டாளியான சவுதி அரேபியா உருவாக்கப்பட்டது முதல் முழுமையான ஒரு முடியாட்சி நாடாக திகழ்கிறது.

எதிர்த்தரப்பினர் அங்கு கொடூரமாக ஒடுக்கப்படுகிறார்கள். அல் சவுட் அரச குடும்பத்தில் இருந்து வந்தாலும் அதே நிலைமைதான்.

அரசாங்கத்தை விமர்சித்த இளவரசர்களை சட்டத்துக்கு புறம்பாக கையாளும் ஒரு முறைமையை முடியாட்சி நடத்துவதான பெரிய குற்றச்சாட்டை பிபிசியின் அரபு சேவை புலனாய்வு செய்தது.

இளவரசர்கள் ஐரோப்பாவில் இருந்து கடத்தப்பட்டு சவுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அதன் பின்னர் அவர்கள் குறித்த தகவல் எதுவும் கிடைக்காதது குறித்த ஆதாரங்களை அவர்கள் கண்டுபிடித்தனர்.

அரச குடும்பத்தவருடன் கடத்தப்பட்ட ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பிரஜைகள் மற்றும் அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சத்தில் ஜெர்மனியில் வசிக்கும் ஒரு இளவரசர் ஆகியோருடன் பிபிசி குழு பேசியது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :