பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகள்

  • 15 ஆகஸ்ட் 2017

இன்று (செவ்வாய்க்கிழமை ) பிபிசி தமிழில் வெளியான செய்திகளில் முக்கியமானவற்றை தொகுத்து வழங்கியுள்ளோம்.

படத்தின் காப்புரிமை SAMUEL BOURNE / HULTON ARCHIVE / GETTY IMAGES

இன்று (செவ்வாய்க்கிழமை), தனது 70 -ஆவது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடி வரும் நிலையில், நாட்டின் முக்கியமான இடங்களின் பொக்கிஷமான புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை பார்க்க: 70-ஆவது சுதந்திர தினம்: இந்தியாவின் புகைப்பட பொக்கிஷங்கள் (புகைப்படத் தொகுப்பு)

மதுரை மாவட்டம் மேலூரில் தினகரன் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு பெரும் எண்ணிக்கையில் தொண்டர்கள் திரண்டாலும், சுமார் 20 சட்டமன்ற உறுப்பினர்களையே அவரால் அங்கு வரவழைக்க முடிந்திருக்கிறது. அ.தி.மு.க. அணிகள் ஒன்றிணையும்போது, அவரது எதிர்காலம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை இது எழுப்பியிருக்கிறது.

செய்தியை படிக்க: தினகரனின் மதுரை பொதுக்கூட்டம்: அதிர்ச்சி வைத்தியம் யாருக்கு?

படத்தின் காப்புரிமை TWITTER

தமிழக முதல்வரின் ராஜிநாமாவை கோரும் விவகாரத்தில் கமல் ஹாசன் வெளியிடும் டிவீட்டுகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்று திமுக கூறியுள்ளது. இந்த விஷயத்தில் கமலின் மலிவு அரசியலை புரிந்து கொள்ள முடியவில்லை என்று அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

செய்தியை படிக்க: 'கமலுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது'

படத்தின் காப்புரிமை MAHINDA FB PAGE

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ இன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பொலிஸ் பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

செய்தியை படிக்க: ரக்பி வீரர் கொலை : மஹிந்த மனைவியிடம் பொலிஸ் விசாரணை

இரானில் உள்ள பிபிசி ஊழியர்களின் சொத்துகளை நடைமுறையளவில் முடக்குவது போல் தோன்றும் உத்தரவை ரத்து செய்யுமாறு, பிபிசி இரானிய ஆட்சியாளர்களை வலியுறுத்தியுள்ளது.

செய்தியை படிக்க:பிபிசி ஊழியர்களின் சொத்துகளை முடக்கியது இரான்

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள அரசு தமிழ் பள்ளிக் கூடத்திற்கு அருகிலுள்ள காணிக்குள் இன்று செவ்வாய்க்கிழமை பௌத்த மதகுரு அம்பிட்டிய சுமனரத்ன தேரோ உள்ளிட்ட பொது மக்கள் அத்து மீறி நுழைய முற்பட்டபோது, அந்த இடத்தில் ஓரிரு மணிநேரம் பதட்டம் ஏற்பட்டது.

செய்தியை படிக்க:இலங்கை: காணி உரிமை தொடர்பாக போலீஸ் - பொதுமக்கள் இடையே பதட்டம்

படத்தின் காப்புரிமை Reuters

அமெரிக்காவின் பசிபிக் பிராந்தியமான குவாம் தீவு மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் திட்டம் குறித்து வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆய்வு நடத்தியதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

செய்தியைப் படிக்க: வடகொரியாவின் தாக்குதல் திட்டத்தை ஆய்வு செய்தார் கிம் ஜாங்-உன்

படத்தின் காப்புரிமை Huw Evans picture agency

காட்டு யானைகளின் பாதுகாப்புக் கருதி, ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் அவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்க இலங்கை வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

செய்தியை படிக்க: காட்டு யானைகள் நடமாட்டம் ஜி.பி.எஸ். மூலம் கண்காணிப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

டோக்லாம் அல்லது டோகா லாவில் பதற்றத்திற்கான உண்மையான காரணம் என்ன? பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பிற்கு முன் இந்த பதற்றங்கள் தொடங்கியதா?

செய்தியைப் படிக்க: இந்தியா-சீனா பதற்றத்தின் பின்னணி என்ன?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்