நைஜீரியா: பெண்கள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 27 பேர் பலி

வட கிழக்கு நைஜீரியாவில் மூன்று பெண்களால் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 27 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல்

பட மூலாதாரம், AFP

இஸ்லாமியவாத தீவிரவாத குழுவான போக்கோ ஹராமின் வலுவிடமாக விளங்கும் போர்னோ மாநிலத்தின் மேய்டுகுரிக்கு அருகில் இருக்கும் அகதிகள் முகாம் ஒன்றிற்கு வெளியே இந்த பெண்கள் தங்களை தாங்களே வெடிக்க செய்தபோது, டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

சமீபத்திய மாதங்களில் இந்த நகரத்தில் நிகழும் வன்முறைகள் அதிகரித்துள்ளன.

2009 ஆம் ஆண்டிலிருந்து இஸ்லாமிய நாட்டை உருவாக்குவதற்காக கூறிக்கொண்டு போக்கோ ஹராம் அமைப்பு செயல்பட்டு வருகிறது.

"ஆண்களை விட அதிக பெண்களை பயன்படுத்தும் முதல் கிளர்ச்சிக் குழுவாக போக்கோ ஹராம் இருக்கிறது” என்று அமெரிக்காவின் தீவிரவாதிகள் எதிர்ப்பு ஆய்வாளர்களால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அகதிகள் முகாமிற்கு அருகில் முதல் தற்கொலை தாக்குதலாளி ஒருவர் தன்னையே வெடிக்க செய்து, பீதியை உருவாக்கினார் என்று இந்த ஜிகாதிகளுக்கு எதிராக போராட உருவாக்கப்பட்ட பாதுகாவல் படையினரில் ஒருவரான பாபா குரா தெரிவித்திருக்கிறார்.

"மக்கள் தங்களுடைய கடைகளை மூடிவிட முயன்றபோது, பிற பெண் தற்கொலை தாக்குதலாளிகள் தங்களை வெடிக்க செய்தது, பலர் பலியாக காரணமாக அமைந்துவிட்டது.

போக்கோ ஹராம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்று கடந்த ஆண்டு நைஜீரியா அரசு கூறியது.

ஆனால், போக்கோ ஹராமின் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதில் அரசுப்படை தோல்வியடைவதாகவும், போர்னோ மாநிலத்தில் தங்களுடைய வீடுகளைவிட்டு மக்கள் வெளியேறி முகாம்களில் குவிவதாகவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :