பிபிசி தமிழில் இன்று... மதியம் 2 மணி வரை

  • 16 ஆகஸ்ட் 2017

இன்று (புதன்கிழமை) பிபிசி தமிழில் மதியம் 2 மணி வரை வெளியான செய்திகளில் முக்கியமானவற்றை தொகுத்து வழங்கியுள்ளோம்.

காணாமல் போகும் சௌதி இளவரசர்கள்

Image caption இளவரசர் துர்க்கி பின் பந்தர், இளவரசர் சுல்தான் பின் துர்க்கி, இளவரசர் சௌத் பின் சயிஃப்

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஐரோப்பிய நாடுகளில் வசித்து வந்த மூன்று செளதி அரேபிய இளவரசர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் மூவருமே செளதி அரசை விமர்சனம் செய்தவர்கள்.

செய்தியை படிக்க: காணாமல் போகும் செளதி அரேபிய இளவரசர்கள்: காரணம் என்ன?

பாவ மன்னிப்பு வழங்கும் கூண்டில் உடலுறவு

படத்தின் காப்புரிமை Alamy
Image caption புனித ஜோசப் தேவாலயத்தை சுத்தம் செய்வதற்காக, கடந்த ஜனவரி மாதம் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

நெதர்லாந்து நாட்டின் தில்பர்க் நகரில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றின் பாவ மன்னிப்பு வழங்கும் கூண்டில் இருவர் உடலுறவு கொள்வது போல் ஆபாசப்படம் எடுக்கப்பட்டதாக தேவாலயத்தின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரை வழக்கறிஞர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளனர்.

செய்தியை படிக்க: தேவாலயத்தில் பாவ மன்னிப்பு வழங்கும் கூண்டில் ஆபாசப்படம் எடுக்கப்பட்டதா?

நைஜீரியா: தற்கொலை தாக்குதல்

படத்தின் காப்புரிமை AFP

வட கிழக்கு நைஜீரியாவில் மூன்று பெண்களால் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 27 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தியை படிக்க: நைஜீரியா: பெண்கள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 27 பேர் பலி

வீடு திரும்பினார் கருணாநிதி

படத்தின் காப்புரிமை Getty Images

இன்று காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பினார்.

செய்தியை படிக்க: மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி

இரு பாலினருக்கும் ஒரே கழிப்பிடம்

படத்தின் காப்புரிமை AFP
Image caption நின்றுகொண்டே சிறுநீர் கழிப்பதால், ஒரு நாளைக்கு 160 டன் நீரை சேமிக்க முடியும் என தனது மாணவிகளிடம் சீனாவின் ஷான்க்‌ஷி நார்மல் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

பொது இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சிறுநீர் கழிப்பிடங்களை , ஆண்களும் பெண்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மாற்றி அமைக்க ஜெர்மனி தலைநகர் பெர்லினில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தியை படிக்க: 'சிறுநீர் கழிக்க ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொது கழிப்பிடம்' புதிய முயற்சி

டெய்லர் ஸ்விஃப்ட் பாலியல் சீண்டல் வழக்கு

படத்தின் காப்புரிமை AFP
Image caption பல்வேறு தடைகள் வந்தபோதிலும் டெய்லர் ஸ்விஃப்ட் இந்த வழக்கில் இருந்து பின்வாங்க மறுத்துவிட்டார்.

2013 -ல் தனது பின்பகுதியை பிடித்து அழுத்தியதாக முன்னாள் டிஜே ஒருவர் மீது தொடர்ந்த வழக்கில் அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் வெற்றி பெற்றுள்ளார்.

செய்தியை படிக்க: டெய்லர் ஸ்விஃப்ட் பாலியல் சீண்டல் வழக்கு: ஏன் முக்கியமானது?

நேசத்தைப் பிரித்த தேசப் பிரிவினை (காணொளி)

இஸ்மத் என்ற முஸ்லிம் பெண், ஜீது என்ற இந்து ஆணை குடும்ப விடுமுறையின் போது காஷ்மீரில் சந்தித்து காதல் கொண்டார். ஆனால், இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு இடையே ஏற்பட்ட பிரிவினை அவர்களின் காதலையும் பிரித்துவிட்டது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பிரிவினை ஒரு இளஞ்ஜோடிகளின் காதலையும் பிரித்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :