பிபிசி தமிழில் இன்று...மாலை 6 மணி வரை

  • 17 ஆகஸ்ட் 2017

இன்று (வியாழக்கிழமை ) பிபிசி தமிழில் மாலை 6 மணி வரை வெளியான செய்திகளில் முக்கியமானவற்றை தொகுத்து வழங்கியுள்ளோம்.

காதலரை திருமணம் செய்தார் இரோம் ஷர்மிளா

மணிப்பூர் மாநிலத்தில் சிறப்பு ஆயுதப் படை சட்டத்தை எதிர்த்துப் போராடி வந்த இரோம் ஷர்மிளா, தனது நீண்ட நாள் தோழரான அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த டெஸ்மாண்ட் அந்தோணி ஹட்டின்ஹோவை கொடைக்கானலில் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.

செய்தியை படிக்க: காதலரை திருமணம் செய்தார் இரோம் ஷர்மிளா

அன்னாபெல் கிரியேஷன் படம் எப்படி உள்ளது?

படத்தின் காப்புரிமை ANNABELLE: CREATION

2014ல் வெளிவந்த அன்னாபெல் படத்திற்கு முன்பாக என்ன நடந்தது என்பதைச் சொல்லும் படம் இது. அதாவது அதன் prequel. தி கான்ஜூரிங் பட வரிசையில் நான்காவது படம் இது. பலவகையில் முதல் பாகத்தைவிட மேம்பட்ட படம்.

செய்தியை படிக்க:சினிமா விமர்சனம்: அன்னாபெல் கிரியேஷன்

கேரட் உதவியால் கிடைத்த மோதிரம்

படத்தின் காப்புரிமை SUBMITTED PHOTO

வைரத்தின் எடையை கேரட் என்னும் அலகால் மதிப்பிடுவது வழக்கம். கனடா நாட்டுப் பெண்மணி மேரி கிராம்ஸ் 13 ஆண்டுகளுக்கு முன்பு தொலைத்த மோதிரத்தில் இருந்த வைரம் எத்தனை கேரட் என்பது தெரியாது. ஆனால், எதிர்பாராத ஆச்சரியமாக அந்த வைர மோதிரத்தை மீட்டுத் தந்திருக்கிறது ஒற்றை கேரட்.

செய்தியை படிக்க:13 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன வைர மோதிரத்தை தேடித் தந்தது கேரட்

மாணவர் போராட்டத்தால் மூடப்பட்ட பலகலைக்கழகம்

மாணவர் போராட்டத்தால் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதால் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகம் வியாழக்கிழமை முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

செய்தியை படிக்க:இலங்கை கிழக்கு பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடல்

பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ள சிறுமி

படத்தின் காப்புரிமை iStock

இந்தியாவில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட 10 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமடைந்திருந்த நிலையில் அவருக்கு கருக்கலைப்பு செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது, அச்சிறுமி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

செய்தியை படிக்க: பாலியல் வல்லுறவுக்குள்ளான 10 வயது சிறுமி 'தாயானார்'

தமிழர் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்ட கேரள முதல்வர்

படத்தின் காப்புரிமை CMO KERALA

மருத்துவ உதவி மறுக்கப்பட்டதால் கேரளாவில் மரணமடைந்த தமிழக தொழிலாளி முருகனின் குடும்பத்தாரிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்புக் கோரியுள்ளார்.

செய்தியை படிக்க:மருத்துவ உதவி மறுக்கப்பட்டதால் இறந்த தமிழர் குடும்பத்துக்கு கேரள முதல்வரின் உதவி

'இந்தியாவிலும் இல்லை, பாகிஸ்தானிலும் இல்லை; எந்த நாடு எங்களுக்கு சொந்தம்?'

'கனியே கே பேட்' கிராமத்திற்கு செல்வதற்கான பயணம் நீண்டது. ராவி நதியையும் அதன் மணற்பரப்பையும் கடந்து செல்லவேண்டும். அதோடு, எல்லை பாதுகாப்புப் படையின் சோதனைச்சாவடியை கடக்கும்போது, அங்குள்ள அடையாள பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும்.

செய்தியை படிக்க:'இந்தியாவிலும் இல்லை, பாகிஸ்தானிலும் இல்லை; எந்த நாடு எங்களுக்கு சொந்தம்?'

வரலாறு படைத்த ஒபாமாவின் டிவிட்டர் பதிவு

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பின் விருப்பத்திற்குரிய தகவல் தொடர்பு சாதனமாக டிவிட்டர் சமூக வலைத்தளம் இருக்கலாம். ஆனால், டிவிட்டர் வரலாற்றிலேயே அதிகம் விரும்பப்பட்ட பதிவாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஒரு பதிவு இடம் பிடித்துள்ளது.

செய்தியை படிக்க:"நாங்கள் தலித் இல்லை என்று சொல்வதற்கு அவர்கள் யார்?"

தாவரங்களை போலியோ தடுப்பு மருந்தாக மாற்றும் முயற்சி வெற்றி?

படத்தின் காப்புரிமை JOHN INNES CENTRE

போலியோ தடுப்பு சக்தியுடையதாக உருவாக்கும் வகையில் தாவர இலைகளை மாற்றியமைத்து கொள்வதில் வெற்றிபெற்றிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தியை படிக்க: தாவரங்களை போலியோ தடுப்பு மருந்தாக மாற்றும் முயற்சி வெற்றி?

நீங்கள் பணிபுரியும் நிறுவனம் உங்களை கண்காணிக்கிறதா?

படத்தின் காப்புரிமை Getty Images

ஒரு பணியில் இருந்து மற்றொரு பணிக்கு மாறுவதற்கு சமூக வலைதளமான லிங்க்டின் (LinkedIn) தளத்தில் நீங்கள் பதிந்துள்ள தரவுகளை, புதிய பணிக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும் என்றும் நீங்கள் சிந்திப்பீர்கள் அல்லவா?

இதைப்பற்றி மேலும் படிக்க: நீங்கள் பணிபுரியும் நிறுவனம் உங்களை கண்காணிக்கிறதா?

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தியா, நேபாளம், வங்கதேசம்

படத்தின் காப்புரிமை Getty Images

அதிக பருவ மழை காரணமாக இந்தியா, வங்கதேசம், நேபாளம் நாடுகளில் உள்ள பகுதிகள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செய்தியை படிக்க:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தியா, நேபாளம், வங்கதேசம் (புகைப்படத் தொகுப்பு )

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்