பிபிசி தமிழில் இன்று... மதியம் வரை வெளியான முக்கிய செய்திகள்

  • 18 ஆகஸ்ட் 2017

பிபிசி தமிழில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் வரை வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

உகாண்டா செல்லும் சூடான் அகதிகள்

படத்தின் காப்புரிமை AFP
Image caption 'உகாண்டாவுக்கு வருகைபுரியும் அகதிகளில் 85 சதவீதத்துக்கும் மேலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்'

தெற்கு சூடானில் நிலவும் வன்முறை சூழலால் அங்கிருந்து உகாண்டாவுக்கு தப்பிச்செல்லும் அகதிகளின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டியுள்ளதாக ஐ.நா. (ஐக்கிய நாடுகள்) அமைப்பு தெரிவித்துள்ளது.

செய்தியை படிக்க: தெற்கு சூடான் அகதிகள் உகாண்டாவில் திரளாக குவிவது ஏன்?

யார் பலசாலி?

இந்தியாவும் சீனாவும் தங்களது பகுதியில் எதிரெதிர் நாட்டுக்கு சமமாக அதிகாரத்தை நிலைநிறுத்தும் முயற்சியாக, தங்களது எல்லைப்பகுதியில் ராணுவ உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

செய்தியை படிக்க: ராணுவத்தில் பலமான நாடு இந்தியாவா, சீனாவா?

``கோமாளிகள்``

வெள்ளை மாளிகையின் கொள்கை வகுப்பு குழுவின் தலைவரான ஸ்டீவ் பனன், வெள்ளை இன மேலாதிக்கவாதிகளை ``கோமாளிகள்`` என விமர்சித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஸ்டீவ் பனன் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் வெள்ளை மாளிகையின் முக்கிய நபர்களாக பார்க்கப்படுகின்றனர்

செய்தியை படிக்க: வெள்ளை இன மேலாதிக்கவாதிகளை ''கோமாளிகள்'' என விமர்சித்த டிரம்பின் ஆலோசகர்

பிரிவினையின் வாழும் சாட்சி

பிரிவினை நடந்த அதே காலகட்டத்தில் பிறந்து, தன் வாழ்நாள் முழுவதும் காஷ்மீரில் கழித்த முகமது யூனுஸ் பட், காஷ்மீர் பதற்றங்களின் வாழும் சாட்சியாக விளங்குகிறார்.

படத்தின் காப்புரிமை BBC Sport
Image caption முகமது யூனுஸ் பட்

செய்தியை படிக்க: காஷ்மீர் பதற்றங்களின் சாட்சியாக விளங்கும் கடைக்கார தாத்தா

போயஸ் தோட்டம் யாருக்கு?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக்கப்போவதாக தமிழக அரசு நேற்று அறிவித்திருந்த நிலையில், அதற்கு அனுமதிக்க முடியாது என அவரது அண்ணன் மகள் தீபா தெரிவித்திருக்கிறார்.

செய்தியை படிக்க: போயஸ் கார்டன் இல்லம் நினைவிடமாக்கப்படும் பிரச்சனை: தீபா, தீபக் கருத்து

பூங்காவுக்காக ஒரு போராட்டம்

தான் வசிக்கும் பகுதியில் இருக்கும் விளையாட்டுப் பூங்காவைப் பாதுகாக்க, டெல்லியைச் சேர்ந்த ஒரு ஏழு வயது சிறுமி நீதிமன்றத்தில் மனு செய்திருப்பதுடன் பிரதமர் நரேந்திர மோதிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

Image caption பூங்காவில் விளையாடும் நவ்யா சிங்.

செய்தியை படிக்க: பூங்காவை காக்க போராடும் ஏழு வயது சிறுமி!

பதற்றத்தில் பார்சிலோனா

பார்சிலோனாவின் பிரபல சுற்றுலாப் பகுதியான லாஸ் ரம்ப்லாஸில் பாதசாரிகள் மீது நடந்த வேன் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption வேன் தாக்குதலை நடத்தியதாக சந்தேகப்படும் நபர் தப்பி சென்றிருக்கலாம் என்று கருதும் போலீசார் சம்பவ இடத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

புகைப்படங்களைப் பார்க்க: பார்சிலோனாவில் நிகழ்ந்த கொடூர வேன் தாக்குதல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :