ஸ்பெயினில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஸ்பெயினில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள்

கடந்த இருபத்தினான்கு மணிநேரத்தில் நடந்த இரு பயங்கரவாத தாக்குதலை அடுத்து ஸ்பெயினின் வடகிழக்குப் பகுதியில் பெரும் போலிஸ் தேடுதல் வேட்டை நடக்கிறது.

பர்சிலோனாவின் பிரபலமான லாஸ் ரம்பலஸ் தெருவில் வான் ஒன்று பாதசாரிகள் மீது மோதச் செய்யப்பட்டதில் பதின் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

சில மணிநேரத்தின் பின்னர் சுற்றுலா தலமான கம்பிரில்ஸில் மற்றுமொரு தாக்குதல் நடந்துள்ளது. ஐந்து பேர் தமது வாகனத்தை தெருவில் சென்றவர்கள் மீது மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

தாக்குதலாளிகள் தற்கொலை அங்கி அணிந்திருந்ததாக நம்பப்பட்டது. அது போலி என்று இப்போது கூறப்படுகின்றது. ஸ்பெயின் போலிஸாரால் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

புதனன்று அல்கனாரில் குண்டு ஒன்று வெடித்தது. ஆட்கள் அங்கு குண்டு தயாரித்துக்கொண்டிருந்ததாக போலிஸார் நம்புகின்றனர்.

தாக்குதலில் அகப்பட்டுக் கொண்டவர்களுக்காக இன்று அங்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரதமர் மரியனோ ரஜோய் மற்றும் மன்னர் ஃபிலிப் ஆகியோர் தலைமையில் அது நடைபெற்றது. நாங்கள் அஞ்சமாட்டோம் என்று அதன் பிறகு கூட்டத்தினர் கோஷமெழுப்பினார்கள்.

பார்சிலோனா தாக்குதலில் ஐந்து பேர் சம்பந்தப்பட்டதாக போலிஸார் கூறுகின்றனர். இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :