பிபிசி தமிழில் இன்று... இரவு வரை வெளியான முக்கிய செய்திகள்
பிபிசி தமிழில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி வரை வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
அதிமுக அணிகள் இணைப்பில் இழுபறி ஏன்?
தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.கவின் இரு அணிகளும் இணைவது தொடர்பான அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு தரப்பு இடையிலான இணைப்பு முயற்சியில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
செய்தியைப் படிக்க: அதிமுக அணிகள் இணைப்பில் இழுபறி ஏன்?
47 ஆண்டுகளுக்குப் பிறகு
இலங்கையின் புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் ஜெரோமி லியன்துரு சின்னையா ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழர் ஒருவர் இப்பதவிக்கு வருவது இதுவே முதல் முறை.
செய்தியை படிக்க: இலங்கை கடற்படையின் தளபதியாக 47 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர் நியமனம்
யார் பலசாலி?
இந்தியாவும் சீனாவும் தங்களது பகுதியில் எதிரெதிர் நாட்டுக்கு சமமாக அதிகாரத்தை நிலைநிறுத்தும் முயற்சியாக, தங்களது எல்லைப்பகுதியில் ராணுவ உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகின்றன.
செய்தியை படிக்க: ராணுவத்தில் பலமான நாடு இந்தியாவா, சீனாவா?
பிரிவினையின் வாழும் சாட்சி
பிரிவினை நடந்த அதே காலகட்டத்தில் பிறந்து, தன் வாழ்நாள் முழுவதும் காஷ்மீரில் கழித்த முகமது யூனுஸ் பட், காஷ்மீர் பதற்றங்களின் வாழும் சாட்சியாக விளங்குகிறார்.
செய்தியை படிக்க: காஷ்மீர் பதற்றங்களின் சாட்சியாக விளங்கும் கடைக்கார தாத்தா
மீண்டும் தாக்குதல்
ஸ்பெயினில் இரண்டாவது நாளாக இன்றும் பொதுமக்கள் மீது வாகனத்தை மோதி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். இதற்கு காரணமான சந்தேக நபர்கள் ஐந்து பேரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.
செய்தியை படிக்க: ஸ்பெயினில் மீண்டும் தாக்குதல்: ஐந்து பேர் சுட்டுக் கொலை
இன்ஃபோசிஸின் தலைமை செயலதிகாரி ராஜிநாமா
பிரபல இந்திய மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸின் தலைமை செயலதிகாரியும், நிர்வாக இயக்குநருமான விஷால் சிக்கா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக அந்நிறுவனம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
செய்தியை படிக்க: இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஒ விஷால் சிக்கா பதவி விலகல்
வீதி உலா செல்லும் சிங்கங்கள்
குஜராத் மாநிலம் அம்ரெல்லி மாவட்டத்திலுள்ள ராம்பர் கிராமத்தில், ஒரு கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான சிங்கங்களின் காட்சி, வேறு எதையோ தெரிவிக்கிறது.

செய்தியை படிக்க: குஜராத்: கிராமத்தில் வீதி உலா செல்லும் சிங்கங்கள்
போயஸ் தோட்ட இல்லம் யாருக்கு?
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக்கப்போவதாக தமிழக அரசு நேற்று அறிவித்திருந்த நிலையில், அதற்கு அனுமதிக்க முடியாது என அவரது அண்ணன் மகள் தீபா தெரிவித்திருக்கிறார்.
செய்தியை படிக்க: போயஸ் கார்டன் எங்கள் பூர்வீக சொத்து: ஜெ.தீபா
நீரிழிவு நோயாளிகளுகளின் வாழ்வை மாற்றியமைக்கவுள்ள சிகிச்சை
காணொளியைக் காண:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :