பிபிசி தமிழில் இன்று... மாலை வரை வெளியான முக்கிய செய்திகள்

பிபிசி தமிழில் இன்று (சனிக்கிழமை) மாலை வரை வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

இணைப்பு எப்போது?

அ.தி.மு.கவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் ஓரிரு நாட்களில் அணிகள் இணைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தெரிவித்துள்ளனர்.

செய்தியை வாசிக்க: அ.தி.மு.க. அணிகள் இணைப்பு எப்போது?

பதவி பறிப்பு

படத்தின் காப்புரிமை Reuters
Image caption டொனால்டு டரம்ப் -ஸ்டீவ் பென்னான்

அமெரிக்க வெள்ளை மாளிகையின் முதன்மை கொள்கை வகுப்பாளராக இருந்த ஸ்டீவ் பென்னான் பதவியை பறித்துள்ளார் அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

செய்தியை வாசிக்க: டிரம்பின் வெற்றிக்கு காரணமாக இருந்தவரின் பதவி பறிப்பு

சீன செயற்பாட்டாளர் மனைவி

படத்தின் காப்புரிமை YOUTUBE
Image caption லியு சியாவ்போவின் மனைவி லியு சியா

சீன செயற்பாட்டாளரும், நோபல் பரிசை வென்றரவருமான லி ஷியாவ்போவின் மனைவி இணையத்தில் வெளியான காணொளி ஒன்றில் நீண்ட நாட்கள் கழித்து தோன்றியுள்ளது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

செய்தியை வாசிக்க: நிர்பந்தப்படுத்தி பதிவு செய்யப்பட்டதா சீன செயற்பாட்டாளர் மனைவியின் காணொளி?

மிதக்கும் தெற்காசிய பகுதிகள்

படத்தின் காப்புரிமை AFP

தெற்காசியப் பகுதிகளில் பருவமழையின் காரணமாக ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தின் காரணமாக 1.6 கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தியை வாசிக்க: தெற்காசியப் பகுதிகளில் மழை வெள்ளம்: 1.6 கோடி பேர் பாதிப்பு

புதினின் புகைப்படங்கள்

படத்தின் காப்புரிமை Reuters

விடுமுறையின்போது ரஷ்ய அதிபர் சட்டையில்லாமல் இருக்கும் புகைப்படங்களால் ஈர்க்கப்பட்டு, "டெலிகிராம்" செயலியின் தலைமை அதிகாரி பாவெல் டுர்ரேஃபும் சமூக வலைதளத்தில் சட்டையில்லாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பிறருக்கும் அந்த ஆர்வத்தைத் தூண்டியுள்ளார்.

செய்தியை வாசிக்க: புதினின் சட்டையில்லாப் புகைப்படங்கள் தூண்டிய ஆர்வம்!

டிரம்ப் சொன்னது கட்டுக்கதையா?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமெரிக்க அதிபர் டிரம்ப்

இஸ்லாமியவாத தீவிரவாதிகளைக் கொல்ல அமெரிக்காவைச் சேர்ந்த ராணுவ தளபதி ஒருவர், பன்றியின் ரத்தத்தைப் பயன்படுத்திய கதை ஒன்றை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், அது ஒரு கட்டுக்கதை என்று ஏற்கனவே நிரூபணம் செய்யப்பட்டது.

செய்தியை வாசிக்க: பன்றி ரத்தத்தில் நனைத்த தோட்டாக்கள்: டிரம்ப் சொன்னது கட்டுக்கதையா?

ஒரு விநோதத் திருமணம்

படத்தின் காப்புரிமை SANTOSH CHOUDARY

சத்தீஸ்கரில் "பஹாடி கோர்வா" எனும் பழங்குடி இனத்தை சேர்ந்த முதியவர்கள் இருவர், திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்கள்.

செய்தியை வாசிக்க: 75 வயது மணமகன் 70 வயது மணமகள்: ஒரு விநோதத் திருமணம்

சிறுமியும் அவளது குழந்தையும் நலம்

படத்தின் காப்புரிமை AFP
Image caption 2015-இல் மட்டும் 10,000-க்கும் அதிகமான இந்தியக் குழந்தைகள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர்.

கருக்கலைப்பு செய்ய இந்திய உச்ச நீதிமன்றத்தால் அனுமதி மறுக்கப்பட்ட, பாலியல் வல்லுறவிற்கு ஆளான பத்து வயது சிறுமியும் அவளது குழந்தையும் நலமுடன் இருப்பதாக, அச்சிறுமிக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

செய்தியை வாசிக்க: 10 வயது சிறுமிக்கு சிசேரியன் பிரசவம்: தாயும் சேயும் நலம்

மீட்பு

படத்தின் காப்புரிமை ISHWOR JOSHI
Image caption நேபாளத்தில் இருந்து வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு இந்தியாவில் மீட்கப்பட்ட காண்டாமிருகம் தாயகம் நோக்கிய தமது பயணத்தைத் தொடக்குகிறது.

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்தியாவிற்குள் அடித்துவரப்பட்ட ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் மீட்கப்பட்டு, நேபாளத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

செய்தியை வாசிக்க: நேபாளத்தில் இருந்து வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட காண்டாமிருகம் மீட்பு

ஒரு பயங்கர அனுபவம்

பார்சிலோனாவில் தாக்குதல் சம்பவம் நடந்தபோது, அங்கிருந்த ஒரு உணவு விடுதியின் குளிர்சாதனப் பெட்டிக்குள் ஒளிந்து கொண்டது பயங்கர அனுபவமாக இருந்தது என்று நடிகையும் நடனக் கலைஞருமான லைலா ரோஸ் கூறியுள்ளார்.

செய்தியை வாசிக்க: பார்சிலோனா தாக்குதல்: ஃப்ரிட்ஜுக்குள் ஒளிந்த நடிகையின் பயங்கர அனுபவம்

தொழில்நுட்ப செய்திகள்

4.5 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பங்குகளை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கிய பில் கேட்ஸ், "குரல் வழி தேடல்" தொழில்நுட்பத்தை மேலும் 30 மொழிகளில் அறிமுகப்படுத்தியுள்ள கூகுள் உள்ளிட்ட செய்திகள் அடங்கியுள்ள காணொளி.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கிளிக் தொழில்நுட்ப காணொளி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :