பிபிசி தமிழில் இன்று... இரவு வரை வெளியான முக்கிய செய்திகள்

  • 19 ஆகஸ்ட் 2017

பிபிசி தமிழில் இன்று (சனிக்கிழமை) இரவு வரை வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை SAMIRATMAJ MISHRA

உத்தர பிரதேசம் மாநிலம் முஸாஃபர்நகரில் உள்ள கத்தோலி அருகே கலிங்க-உத்கல் விரைவு ரயிலின் பத்திற்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 10 பேர் பலியாகியிருப்பதாகவும், 50 பேர் காயமடைந்திருப்பதாகவும் உ.பி., போலீஸ் தெரிவித்துள்ளது.

செய்தியை வாசிக்க: உ.பி.யில் விரைவு ரயில் தடம் புரண்டு 10 பேர் பலி

படத்தின் காப்புரிமை Getty Images

பா.ஜ.க தலைவர் அமித் ஷா சென்னை வருவதற்கு முன்பாக, அ.தி.மு.க அணிகள் இணைப்பு குறித்த முறையான அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியை வாசிக்க: அதிமுக அணிகள் இணைப்பு: பேரத்தின் பின்னணி என்ன?

படத்தின் காப்புரிமை AJITH KUMAR

சமூக வலைத்தளங்களில் திரைப்பட நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்களையும், பெயரையும் பயன்படுத்தும் நபர்கள், திரை துறையையும், பத்திரிகையாளர்களையும், விமர்சகர்களையும் கீழ்த்தரமாக தாக்கி கருத்துக்களை வெளியிட்டு வருவதால் அஜித் குமார் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதாக அஜித்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

செய்தியை வாசிக்க: சமூக வலைத்தளங்களில் கீழ்த்தரமான பேச்சு; கடும் மன உளைச்சலில் நடிகர் அஜித்

படத்தின் காப்புரிமை Reuters
Image caption டொனால்டு டரம்ப் -ஸ்டீவ் பென்னான்

அமெரிக்க வெள்ளை மாளிகையின் முதன்மை கொள்கை வகுப்பாளராக இருந்த ஸ்டீவ் பென்னான் பதவியை பறித்துள்ளார் அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

செய்தியை வாசிக்க: டிரம்பின் வெற்றிக்கு காரணமாக இருந்தவரின் பதவி பறிப்பு

படத்தின் காப்புரிமை YOUTUBE
Image caption லியு சியாவ்போவின் மனைவி லியு சியா

சீன செயற்பாட்டாளரும், நோபல் பரிசை வென்றரவருமான லி ஷியாவ்போவின் மனைவி இணையத்தில் வெளியான காணொளி ஒன்றில் நீண்ட நாட்கள் கழித்து தோன்றியுள்ளது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

செய்தியை வாசிக்க: நிர்பந்தப்படுத்தி பதிவு செய்யப்பட்டதா சீன செயற்பாட்டாளர் மனைவியின் காணொளி?

படத்தின் காப்புரிமை Reuters

விடுமுறையின்போது ரஷ்ய அதிபர் சட்டையில்லாமல் இருக்கும் புகைப்படங்களால் ஈர்க்கப்பட்டு, "டெலிகிராம்" செயலியின் தலைமை அதிகாரி பாவெல் டுர்ரேஃபும் சமூக வலைதளத்தில் சட்டையில்லாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பிறருக்கும் அந்த ஆர்வத்தைத் தூண்டியுள்ளார்.

செய்தியை வாசிக்க: புதினின் சட்டையில்லாப் புகைப்படங்கள் தூண்டிய ஆர்வம்!

படத்தின் காப்புரிமை SANTOSH CHOUDARY

சத்தீஸ்கரில் "பஹாடி கோர்வா" எனும் பழங்குடி இனத்தை சேர்ந்த முதியவர்கள் இருவர், திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்கள்.

செய்தியை வாசிக்க: 75 வயது மணமகன் 70 வயது மணமகள்: ஒரு விநோதத் திருமணம்

படத்தின் காப்புரிமை Twitter

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நள்ளிரவு நேரத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்பதை கண்டறிய துணைநிலை ஆளுநர் கிரண் பேடிமேற்கொண்ட மாறுவேட நடவடிக்கை, மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

செய்தியை வாசிக்க: நள்ளிரவில் மாறுவேடத்தில் கிரண் பேடி அதிரடி!

படத்தின் காப்புரிமை ISHWOR JOSHI
Image caption நேபாளத்தில் இருந்து வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு இந்தியாவில் மீட்கப்பட்ட காண்டாமிருகம் தாயகம் நோக்கிய தமது பயணத்தைத் தொடக்குகிறது.

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்தியாவிற்குள் அடித்துவரப்பட்ட ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் மீட்கப்பட்டு, நேபாளத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

செய்தியை வாசிக்க: நேபாளத்தில் இருந்து வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட காண்டாமிருகம் மீட்பு

4.5 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பங்குகளை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கிய பில் கேட்ஸ், "குரல் வழி தேடல்" தொழில்நுட்பத்தை மேலும் 30 மொழிகளில் அறிமுகப்படுத்தியுள்ள கூகுள் உள்ளிட்ட செய்திகள் அடங்கியுள்ள காணொளி.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கிளிக் தொழில்நுட்ப காணொளி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :