மோதி ஆட்சியில் நடந்த பெரும் ரயில் விபத்துகள்: 'எப்போது மத்திய அரசு விழிக்கும்?' - காங்கிரஸ்

  • 20 ஆகஸ்ட் 2017
ரயில் விபத்துகள்

உத்தர பிரதேசம் மாநிலம் முஸாஃபர்நகரில் கலிங்க-உத்கல் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 21 பேர் பலியானதையடுத்து, ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு எதிர்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

சுரேஷ் பிரபு ரயில்வே துறை அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என எதிர்கட்சிகள் கோருகின்றன.

``ரயில்வேயில் மக்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லாத போது, மக்கள் எப்படி ரயிலில் பயணிப்பார்கள்?`` என ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவரும், முன்னாள் ரயில்வே துறை அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

``மோதி தலைமையிலான அரசு பதவி ஏற்றதில் இருந்து, நூற்றுக்கணக்கான மக்கள் ரயில் விபத்தில் இறந்துள்ளனர். எப்போது மத்திய அரசு விழிக்கும்`` என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவலா டிவீட் செய்துள்ளார்.

படத்தின் காப்புரிமை TWITTER

``பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டதற்கான விளைவுகளைக் கண் முன்னே பார்க்கிறோம்`` என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

சுரேஷ் பிரபு கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி ரயில்வே அமைச்சராகப் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதில் இருந்து நாட்டில் இதுவரை 6 பெரிய ரயில் விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

சுரேஷ் பிரபு ரயில்வே அமைச்சரான பிறகு ஏற்பட்ட பெரிய ரயில் விபத்துகள்:

  • பிப்ரவரி 13, 2015: பெங்களூரு-எர்ணாகுளம் விரைவு ரயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு எதிர்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்
  • மார்ச் 20,2015: டெஹ்ராடூனில் இருந்து வாரணாசி சென்றுகொண்டிருந்த ஜனதா விரைவு ரயில் தடம்புரண்டதில் 34 பேர் கொல்லப்பட்டனர்.
  • ஆகஸ்ட் 4, 2015: மத்தியப் பிரதேசத்தில் காமயானி விரைவு ரயிலும், ஜனதா விரைவு ரயிலும் தடம்புரண்டதில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
  • நவம்பர் 20, 2016: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த ரயில் விபத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
  • ஜனவரி 22, 2017: ஆந்திராவில் ஹிமாச்சல பிரதேசம் எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டதில் குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டனர்.
  • ஆகஸ்ட் 19, 2017: முஸாஃபர்நகரில் கலிங்க-உத்கல் விரைவு ரயில் தடம் புரண்டதில் 21 பேர் உயிரிழந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஜாீஹஸ

தொடர்புடைய தலைப்புகள்