பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகள்

பிபிசி தமிழில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன், ஜீவசமாதி அடையப்போவதாக் கூறி கடந்த மூன்று நாட்களாக வேலூர் சிறையில்உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் நிலையில், இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கருத்துதெரிவிக்க மறுத்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

செய்தியைப் படிக்க: ஜீவ சமாதி அடையப்போவதாக முருகன் உண்ணாவிரதம்: சிறைத்துறையின் கருத்து என்ன?

இந்தியாவின் புகழ்பெற்ற புகைப்பட கலைஞரான ரகுராய் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. அவரது கேமரா வழியாக எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் வரலாற்று சாட்சியாக விளங்குகின்றன.

செய்தியைப் படிக்க: புகழ்பெற்ற புகைப்பட கலைஞரான ரகுராய்க்கு கேமராவை அறிமுகப்படுத்தியது யார்?

இந்தியாவில் உள்ள சமூக ஊடகங்களில், பெண் குழந்தை ஒன்று அழுதுகொண்டே சிரமப்பட்டு வீட்டுப்பாடத்தை படிக்கும் காணொளி மிகவும் வைரலாக பரவிவரும் நிலையில், இந்த காணொளி குறித்து தன்னுடைய அதிர்ச்சியை, இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

செய்தியைப் படிக்க: ''குழந்தையின் கோபமும், வலியும் இங்கு புறக்கணிக்கப்படுகிறது'': கோலி வருத்தம்

உத்தர பிரதேசம் மாநிலம் முஸாஃபர்நகரில் கலிங்க-உத்கல் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 21 பேர் பலியானதையடுத்து, ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு எதிர்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

செய்தியைப் படிக்க: மோதி ஆட்சியில் நடந்த பெரும் ரயில் விபத்துகள்: 'எப்போது மத்திய அரசு விழிக்கும்?' - காங்கிரஸ்

கட்டுப்பாடான இந்திய சமூகத்தில் ஹெச்ஐவி தொற்று ஏற்பட்டு, எய்ட்ஸ் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று எண்ணப்பட்டு வந்த நேரத்தில், தன்னுடைய மருத்துவ ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்க எடுத்த முயற்சி, இந்தியாவில் எத்தகைய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்பது பற்றி மருத்துவர் நிர்மலா நினைவுகூர்கிறார்.

செய்தியைப் படிக்க: எய்ட்ஸ் - உண்மையை உலகறியச் செய்த தமிழ் மருத்துவ மாணவி

படத்தின் காப்புரிமை Science Photo Library

700 ஆண்டுகளின் மிகப்பெரிய அளவிலான எரிமலை வெடிப்பாக இருந்தாலும், அதற்கு காரணமான எரிமலையை விஞ்ஞானிகளால் இன்னமும் கண்டறியமுடியவில்லை.

செய்தியைப் படிக்க:விஞ்ஞானிகளால் கண்டறிய முடியாத மாபெரும் எரிமலை

படத்தின் காப்புரிமை Getty Images

இராக்கில் ஐ.எஸ் பிடியில் இருக்கும் கடைசி நகரங்களில் ஒன்றான டல் அஃபாரை மீண்டும் கைப்பற்றுவதற்கான தரைப்படை நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

செய்தியைப் படிக்க:ஐ.எஸ் தீவிரவாதிகளை விரட்டும் இறுதி முயற்சியில் இராக்கில் தாக்குதல் முன்னெடுப்பு

படத்தின் காப்புரிமை AMIT SAINI

உத்தர பிரதேசம் மாநிலம் முஸாஃபர்நகரில் உள்ள கத்தோலி அருகே கலிங்க-உத்கல் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 85 பேர் காயம் அடைந்துள்ளனர்.

செய்தியைப் படிக்க:உ.பி., ரயில் விபத்து; 21 பேர் பலி, 85 பேர் காயம்

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனல்டு டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, ஓரினச் சேர்க்கையாளர்கள், சிறுபான்மை மதக் குழுக்கள், ஹிஸ்பேனிக்ஸ் எனப்படும் ஸ்பெயின் மற்றும் போர்த்துகீசிய பாரம்பரியத்தை உடைய, லத்தீன் அமெரிக்காவில் இருந்து புலம் பெயர்ந்த மக்கள் என பல தரப்பினர் மீதும் வெறுப்பின் காரணமாக நிகழும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

செய்தியைப் படிக்க:பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்தே பயப்படவைக்கும் டிரம்பின் அமெரிக்கா!

கும்பகோணம் பள்ளி தீ இவ்விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர், கீழமை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில், 11 பேரை விடுதலை செய்து, 10 பேருக்கு தண்டனை வழங்கியது.

செய்தியைப் படிக்க:கும்பகோணம் பள்ளி தீ விபத்து தீர்ப்பு – கற்றுத்தந்த பாடம் என்ன?

இலங்கையில் யானை - மனித மோதல்கள் உள்ளடங்கலாக பல்வேறு காரணங்களினால் ஆண்டுதோறும் இருநூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செய்தியைப் படிக்க: இலங்கையில் ஆண்டுதோறும் 200ற்கும் மேற்பட்ட யானைகள் கொல்லப்படும் சோகம்!

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடந்த காலகட்டத்தின் நிகழ்வுகள் பற்றிய பிபிசி ஆய்வுத் தொடரின் ஒரு பாகம்.

செய்தியைப் படிக்க:பிரிவினை: 'குடும்பத்தினர் அனைவரும் பாகிஸ்தானில் நான் மட்டும் இந்தியாவில்'

படத்தின் காப்புரிமை AFP

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள ஒரு சிறை, நீண்ட காலக் கருத்தடை சிகிச்சை செய்து கொள்ளும் கைதிகளின் தண்டனைக் காலத்தில் இருந்து 30 நாட்களைக் குறைத்தது.

செய்தியைப் படிக்க:கருத்தடை செய்துகொண்டால் சிறையிலிருந்து விடுதலை!

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :