பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகள்

  • 21 ஆகஸ்ட் 2017

பிபிசி தமிழில் இன்று (திங்கள்கிழமை) வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு மற்றும் துணை முதல்வராக ஒபிஎஸ் பதவியேற்பு ஆகியவை இன்று (திங்கள்கிழமை) நடந்துள்ள சூழலில், தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசுக்கு, அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் செயல்பாடு, சவால் நிறைந்ததாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை Twitter

செய்தியை படிக்க: அதிமுக அரசுக்கு தினகரன் சவாலா?: அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

தமிழக அரசியலின் பரபரப்பான சூழலில் அதிமுக அணிகள் இணைக்கப்பட்டதை அடுத்து சமூக வலைதளங்களில் மக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை டிவிட்டர்

செய்தியை படிக்க: `இதுதான் தர்மயுத்தமா?` கேள்விக்கணை தொடுக்கும் மக்கள்

பெங்களூரு சிறையில் சாதாரண உடையில் அதிமுக தற்காலிக பொதுச் செயலாளர் சசிகலா நடமாடும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

செய்தியை படிக்க: சிறைக்குள் சாதாரண உடையில் சசிகலா: கசிந்தது காணொளி

படத்தின் காப்புரிமை Twitter

தமிழகத்தில் ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டி.டி.வி.தினகரன் அணி நீங்கலாக, அதிமுக தலைமையகத்தில் இன்று சந்தித்து இணைந்தனர்.

செய்தியை படிக்க:இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் அணிகள்: கடந்து வந்த பாதை

படத்தின் காப்புரிமை Twitter

தமிழக துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும், மாநில அமைச்சராக கே.பாண்டியராஜனும் இன்று (திங்கள்கிழமை) மாலை பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மாநில பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிய நிகழ்வில் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

செய்தியை படிக்க:துணை முதல்வராக ஓ.பி.எஸ் பதவியேற்பு: பாண்டியராஜனும் அமைச்சரானார்

படத்தின் காப்புரிமை IKAMALHAASAN

அதிமுகவின் இரு அணிகளின் இணைப்புக்கான பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், ``காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில். போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா.`` என நடிகர் கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார்.

செய்தியை படிக்க:``காந்திக்குல்லா! காவிக்குல்லா!....தற்போது கோமாளிக்குல்லா``- யாரைச் சொல்கிறார் கமல்?

படத்தின் காப்புரிமை Rex Features

சிங்கப்பூருக்கு அருகே அமெரிக்க போர் கப்பலும், எண்ணெய் ஏற்றிச் சென்ற ஒரு கப்பலும் மோதி விபத்துக்குள்ளானதில் பத்து அமெரிக்க கடற்படை மாலுமிகள் காணாமல் காணாமல் போய் உள்ளதாகவும், ஐந்து மாலுமிகள் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

செய்தியை படிக்க:சிங்கப்பூர் அருகே எண்ணெய் கப்பலுடன் அமெரிக்க போர் கப்பல் மோதி விபத்து

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

மீண்டும் வட கொரியாவை கோபமூட்டும் வகையில், அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. ஆனால் இது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான பயிற்சிதான் என அந்நாடுகள் தெரிவித்துள்ளன.

செய்தியை படிக்க:அமெரிக்கா- தென்கொரியா ராணுவ ஒத்திகை: மீண்டும் கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாப் பாடகி அர்யானா சயீத் நடத்திய இசை நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு பழமைவாதிகளிடமிருந்து எதிர்ப்பு மற்றும் தாக்குதல் அச்சுறுத்தல்கள் வந்தபோதிலும் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியை படிக்க:அச்சுறுத்தலுக்கு மத்தியில் இசை நிகழ்ச்சி நடத்திய ஆப்கன் பாடகி

படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கையில் உள்ள தம்புள்ளை மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் ஒருநாள் போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், அது குறித்த 5 முக்கிய காரணங்களை இங்கே காணலாம்.

செய்தியை படிக்க:கிரிக்கெட்: இந்தியாவின் அபார வெற்றிக்கு 5 முக்கிய காரணங்கள்

உங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்!.மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் முதல் பகுதி இது.

செய்தியை படிக்க: போலி தங்கக்கட்டி எது? புதிரை கண்டுபிடியுங்கள்!

படத்தின் காப்புரிமை AFP

இரண்டாம் உலகப் போரில், ஜப்பானிய நீர்மூழ்கி கப்பலால் மூழ்கடிக்கப்பட்ட `யுஎஸ்எஸ் இண்டியானா பொலிஸ்` என்ற கனரக கப்பல் 72 ஆண்டுகளுக்கு பிறகு பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செய்தியை படிக்க:72 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க போர் கப்பல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :