பிபிசி தமிழில் இன்று...1 மணி வரை வெளியான முக்கிய செய்திகள்

பிபிசி தமிழில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1 மணி வரை வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை MAHMUD HAMS

முஸ்லிம்களின் விவாகரத்து வழக்கமான முத்தலாக் முறை, அரசியலைப்புக்கு எதிரானது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ் கேஹர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

செய்தியை படிக்க:முத்தலாக் சட்ட விரோதமானது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தமிழகத்தில் தற்போதைய முதலமைச்சரான எடப்பாடி கே. பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக டிடிவி தினகரன் தரப்பைச் சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்களும் தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்துள்ளனர்.

செய்தியை படிக்க:எடப்பாடி மீது நம்பிக்கையில்லை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுனரிடம் கடிதம்

படத்தின் காப்புரிமை Getty Images

உங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்!இன்று யார் பொய் சொல்கிறார்கள் என்று கண்டுபிடியுங்கள்! வாழ்த்துகள்!

செய்தியை படிக்க:பொய் சொல்பவர் யார்? புதிரை கண்டுபிடியுங்கள்!

படத்தின் காப்புரிமை Getty Images

இளைஞர்களில் ஒருவர், இந்து மத கடவுளரான சிவனின் ரூபங்களில் ஒன்றான அர்தநாரீஸ்வரின் பல்வேறு பரிமாணங்களை விவரிக்கத் தொடங்கியபோது, பாகிஸ்தானியர்கள் பற்றி என் மனதில் உருவாகியிருந்த ஒரு பொது எண்ணம் தவறு என்று உணர்ந்துக்கொண்டேன்.

செய்தியை படிக்க:சிவனின் அர்த்தநாரீஸ்வரர் ரூபம் பாகிஸ்தானில் விரும்பப்படுகிறதா?

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

கேரளாவைச் சேர்ந்த ஷஃபீக் ஜஹானுக்கும், ஹதியா என்னும் அகிலாவுக்கும் நடந்த திருமணம் 'லவ் ஜிஹாதா?' என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். முஸ்லிம் பெண்ணுக்கும், இந்து ஆண் என்ற தம்பதியை பார்க்கக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

செய்தியை படிக்க:திருமணங்கள் அனைத்தையும் 'லவ் ஜிஹாத்' என்று சொல்லலாமா?

படத்தின் காப்புரிமை SANJOY MAJUMDER/BBC

அண்மையில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் 70-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ள நிலையில், பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் 11-ஆவது பாகம் இது.

செய்தியை படிக்க: ஜின்னாவின் பங்களா இந்தியாவில் ‘எதிரி சொத்து’

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :