பிபிசி தமிழில் இன்று...6 மணி வரை வெளியான முக்கிய செய்திகள்

  • 22 ஆகஸ்ட் 2017

பிபிசி தமிழில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி வரை வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

மருத்துவ படிப்புகளில் சேர மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு முறையில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

செய்தியை படிக்க: நீட் தேர்வு: தமிழகத்துக்கு விலக்கு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை அவசரமாகத் திரும்பப் பெற்றால் அங்கு ஏற்படும் வெற்றிடத்தைப் பயங்கரவாதிகள் நிரப்ப நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

செய்தியை படிக்க:ஆப்கனில் உள்ள அமெரிக்க படைகளை திரும்பப் பெற முடியாது: டிரம்ப் உறுதி

படத்தின் காப்புரிமை Getty Images

"முத்தலாக்" விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, முஸ்லிம் பெண்களின் வாழ்வில் மறக்க முடியாத வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்றும் அதைக் கொண்டாட வேண்டும் என்றும் அந்த வழக்கில் முக்கிய மனுதாரரான ஷயரா பானு கூறியுள்ளார்.

செய்தியை படிக்க:முத்தலாக் தீர்ப்பு வெற்றியை கொண்டாட ஷயரா பானு அழைப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

சைபர் கீல் என்ற இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்கள், ஒரு கப்பல் நிறுவனத்தின் மின்னஞ்சல் நடவடிக்கைகளை ஆய்வு செய்தபோது அதிர்ச்சிகரமான ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தனர்.

செய்தியை படிக்க:கப்பல்துறையை குறிவைக்கும் ஹேக்கர்கள்: திணறும் கப்பல் நிறுவனங்கள்

படத்தின் காப்புரிமை TWITTER

டிவிட்டரில் தன்னை கேலி செய்ய நினைத்தவருக்கு அதிரடியான பதிலடி கொடுத்து சமூக ஊடகத்தில் அதிக பாராட்டுகளைப் பெற்று வருகிறார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ்.

செய்தியை படிக்க:டிவிட்டரில் கேலி செய்தவருக்கு பதிலடி கொடுத்த மித்தாலி

படத்தின் காப்புரிமை PEAR VIDEO

சீனாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள ஒரு நகரத்தில் செல்வந்தர்கள் மற்றும் பிரபலங்கள் மட்டுமின்றி அனைவரும் தனிப்பட்ட பாதுகாவலர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் செயலி அறிமுகப்படுத்தவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

செய்தியை படிக்க:சீனாவின் வடகிழக்கு பகுதியில் தனிநபர் பாதுகாப்பு செயலி அறிமுகம்

படத்தின் காப்புரிமை Getty Images

முஸ்லிம்களின் விவாகரத்து வழக்கமான முத்தலாக் முறை, அரசியலைப்புக்கு எதிரானது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ் கேஹர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

செய்தியை படிக்க:முத்தலாக் சட்ட விரோதமானது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தமிழகத்தில் தற்போதைய முதலமைச்சரான எடப்பாடி கே. பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக டிடிவி தினகரன் தரப்பைச் சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்களும் தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்துள்ளனர்.

செய்தியை படிக்க:எடப்பாடி மீது நம்பிக்கையில்லை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுனரிடம் கடிதம்

படத்தின் காப்புரிமை Getty Images

உங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்!இன்று யார் பொய் சொல்கிறார்கள் என்று கண்டுபிடியுங்கள்! வாழ்த்துகள்!

செய்தியை படிக்க:பொய் சொல்பவர் யார்? புதிரை கண்டுபிடியுங்கள்!

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :