பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகள்

பிபிசி தமிழில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை EPA

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றவாளிகளில் ஒருவர், பெரிய தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்ததை ஒப்புக்கொண்டதாக ஸ்பெயின் நீதிமன்ற தகவல்கள் கூறுகின்றன.

செய்தியை படிக்க: ``பார்சிலோனாவில் பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தோம்``- சந்தேக நபர்

படத்தின் காப்புரிமை Getty Images

நீட் எனப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு முடிவுகளின்படி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, பொது சுகாதாரத் துறையைக் கடுமையாகப் பாதிக்கும் என்று கல்வித்துறை ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

செய்தியை படிக்க: "நீட் முடிவு பொது சுகாதாரத் துறையை, கல்வித்துறையை பெரிதும் பாதிக்கும்"

உடல்நலமின்றி வீட்டில் ஓய்வெடுத்துவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முரசொலி பவளவிழா மாநாட்டில் பேசப்போவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

செய்தியை படிக்க: தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார் வைகோ; முரசொலி விழாவில் பங்கேற்பதாக அறிவிப்பு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படை விலகாது என்கிறார் டிரம்ப்

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை அவசரமாகத் திரும்பப் பெற்றால் அங்கு ஏற்படும் வெற்றிடத்தைப் பயங்கரவாதிகள் நிரப்ப நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

செய்தியை படிக்க:ஆப்கனில் உள்ள அமெரிக்க படைகளை திரும்பப் பெற முடியாது: டிரம்ப் உறுதி

படத்தின் காப்புரிமை Getty Images

முஸ்லிம்களின் விவாகரத்து வழக்கமான முத்தலாக் முறை, அரசியலைப்புக்கு எதிரானது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ் கேஹர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

செய்தியை படிக்க:முத்தலாக் சட்ட விரோதமானது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

படத்தின் காப்புரிமை FACEBOOK/M.K.STALIN

டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றிருப்பதாகக் கூறியிருக்கும் நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

செய்தியை படிக்க: தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை

படத்தின் காப்புரிமை Getty Images

முஸ்லிம் நாடுகளில் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ள முத்தலாக் முறை குறித்து இஸ்லாமிய அறிஞர்களிடையேகூட கருத்தொற்றுமை இல்லை.

செய்தியை படிக்க: முஸ்லிம் நாடுகளில் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ள முத்தலாக்

Image caption விஜயதாஸ ராஜபக்ஷ

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பேரில், அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சக பொறுப்புகளிலிருந்து நீக்குமாறு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைத்துள்ளார்.

செய்தியை படிக்க: இலங்கை : நீதி அமைச்சரை பதவி நீக்கம் செய்ய பிரதமர் பரிந்துரை

படத்தின் காப்புரிமை Getty Images

சைபர் கீல் என்ற இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்கள், ஒரு கப்பல் நிறுவனத்தின் மின்னஞ்சல் நடவடிக்கைகளை ஆய்வு செய்தபோது அதிர்ச்சிகரமான ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தனர்.

செய்தியை படிக்க:கப்பல்துறையை குறிவைக்கும் ஹேக்கர்கள்: திணறும் கப்பல் நிறுவனங்கள்

படத்தின் காப்புரிமை TWITTER

டிவிட்டரில் தன்னை கேலி செய்ய நினைத்தவருக்கு அதிரடியான பதிலடி கொடுத்து சமூக ஊடகத்தில் அதிக பாராட்டுகளைப் பெற்று வருகிறார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ்.

செய்தியை படிக்க:டிவிட்டரில் கேலி செய்தவருக்கு பதிலடி கொடுத்த மித்தாலி

அலாஸ்காவில் பாதுகாக்கப்பட்ட இடங்களில் வாழும் குட்டிக்கரடிகளை வேட்டையாடுவதற்கு இருந்த சட்டத்தை அதிபர் டிரம்ப் நீக்கியுள்ளார். இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அலாஸ்காவில் கரடிகளை வேட்டையாடுவதற்கான தடையை நீக்கியதன் விளைவு என்ன?

லிபியாவில் கர்ணல் கடாஃபி ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு ஆறு ஆண்டுகளாகியும், அங்கு இன்னும் போர் மேகங்கள் கலையவில்லை. (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
லிபியா: கடாஃபிக்கு பிறகும் தொடரும் போர் மேகங்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :