பிபிசி தமிழில் இன்று... மதியம் 1 மணி வரை வெளியான முக்கிய செய்திகள்

பிபிசி தமிழில் இன்று (புதன்கிழமை) மதியம் 1 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

Image caption காற்று மாசு இளம் மாணவர்களையும் விட்டுவைக்கவில்லை.

நுரைச்சோலை பகுதியில் படிக்கும் மாணவர்களின் வெள்ளை நிற சீருடை, உடனே கருப்பாகி விடுகின்றன. கருப்பு நிறம் அங்கு காற்றிலேயே கலந்திருக்கிறது.

செய்தியை படிக்க: இலங்கை: மாசு உற்பத்தி நிலையமாகும் மின் உற்பத்தி நிலையம்

படத்தின் காப்புரிமை Getty Images

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் முகப்பவுடரை பயன்படுத்தியதால், கருப்பை புற்று நோய் ஏற்பட்டதாக வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு 417 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க அந்த நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்தியை படிக்க: முகப்பவுடரால் புற்று நோய்: ஜான்சன் & ஜான்சனுக்கு 417 மில்லியன் டாலர் அபராதம்

மனிதக்கறி உண்டு அலுத்துப் போய்விட்டதாக போலீசாரிடமே சொல்லி, நான்கு பேர் வசமாக மாட்டிக் கொண்டார்கள்.

செய்தியை படிக்க: மனித கறி உண்பது அலுத்து விட்டதாகக் கூறி போலீஸிடம் சிக்கிய நால்வர்!

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஒரு பெண்ணை உடனடியாக அவரது கணவர் விவாகரத்து செய்து விடலாம் என்னும் அந்த நடைமுறை, தங்கள் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று ஐந்து பெண்கள் வழக்கு தொடர்ந்ததையடுத்து இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

செய்தியை படிக்க: முத்தலாக் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐந்து பெண்கள் யார்?

சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2,500 நட்சத்திர ஆமைகளை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையும் தமிழ்நாடு வனப் பாதுகாப்புப் படையும் இணைந்து மீட்டன.

செய்தியை படிக்க: சென்னையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2500 நட்சத்திர ஆமைகள் மீட்பு

மேற்கு ஆஃப்ரிக்காவின் லாகோஸில் ரொட்டி விற்ற ஒரு பெண் நட்சத்திர நடிகையாக உருவெடுத்துள்ளார். நைஜீரியாவின் சிண்ட்ரெல்லாவாக நடித்துள்ள ஒலஜொமொக் எனும் அந்த நடிகையின் வளர்ச்சி மேற்கு ஆஃப்ரிக்கா முழுவதும் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ரொட்டி விற்ற ஒரு பெண் நட்சத்திர நடிகையாக உருவெடுத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :