பிபிசி தமிழில் இன்று...மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகள்

  • 23 ஆகஸ்ட் 2017

பிபிசி தமிழில் இன்று (புதன்கிழமை)மாலை 6 மணி வரை வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

இலங்கை நீதி மற்றும் பௌத்த சாசனத் துறைகளின் அமைச்சர் பொறுப்பில் இருந்து விஜயதாஸ ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீக்கியுள்ளார்.

செய்தியை படிக்க:இலங்கை அமைச்சர் பதவியில் இருந்து விஜயதாஸ ராஜபக்ஷ நீக்கம்

படத்தின் காப்புரிமை AIADMK

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டதாக டிடிவி தினகரன் தரப்பு நேற்று தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர்கள் சிலரை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கியிருப்பதாக தினகரன் அறிவித்திருக்கிறார்.

செய்தியை படிக்க:அ.தி.மு.க. அமைச்சர்களை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி டிடிவி தினகரன் உத்தரவு

படத்தின் காப்புரிமை Getty Images

உலகிலேயே அதிவேக ரயில்களை கொண்ட நாடாக மீண்டும் மாறவிருக்கிறது சீனா.அடுத்த வாரத்தில் இருந்து சில ரயில்கள், மீண்டும் அதிகபட்சமாக மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்ல அனுமதிக்கப்படும்.

செய்தியை படிக்க:உலகின் அதிவேக ரயிலை மீண்டும் களம் இறக்கியது சீனா

படத்தின் காப்புரிமை TWITTER

இந்தியாவில் அடுத்தடுத்து நடைபெறும் ரயில் விபத்துகளுக்கு தார்மீக பொறுப்பு ஏற்பதாக பிரதமர் நரேந்திர மோதியிடம் தெரிவித்துள்ளதாக இந்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

செய்தியை படிக்க:தொடரும் ரயில் விபத்துகளுக்கு தார்மீக பொறுப்பேற்றார் இந்திய ரயில்வே அமைச்சர்

படத்தின் காப்புரிமை Reuters

எண்ணெய் டேங்கர் ஒன்றுடன் அமெரிக்க போர்க்கப்பல் மோதிய விபத்தை அடுத்து அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பல் தள பிரிவின் கமாண்டர் வைஸ் அட்மிரல் ஜோசப் அகாய்ன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

செய்தியை படிக்க:டேங்கர்-போர்க்கப்பல் மோதல்: அமெரிக்க கடற்படை பிரிவின் கமாண்டர் நீக்கம்

படத்தின் காப்புரிமை ARCHAEOLOGICAL SURVEY OF INDIA AND GETTY IMAGES

சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவும் பாகிஸ்தானும் வெவ்வேறு நாடுகள் இல்லை. பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றபோது ஒரு நாடு இரண்டு துண்டுகளானது.இரு நாடுகளின் கலை, கலாசாரம், பாரம்பரியம் அனைத்தும் ஒன்றாக இருந்தன. சொத்துக்களும் ஒன்றாகவே இருந்தன

செய்தியை படிக்க:இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை: பொன் ஆரம் முதல் யானை வரை தப்பவில்லை!

Image caption காற்று மாசு இளம் மாணவர்களையும் விட்டுவைக்கவில்லை.

நுரைச்சோலை பகுதியில் படிக்கும் மாணவர்களின் வெள்ளை நிற சீருடை, உடனே கருப்பாகி விடுகின்றன. கருப்பு நிறம் அங்கு காற்றிலேயே கலந்திருக்கிறது.

செய்தியை படிக்க: இலங்கை: மாசு உற்பத்தி நிலையமாகும் மின் உற்பத்தி நிலையம்

படத்தின் காப்புரிமை Getty Images

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் முகப்பவுடரை பயன்படுத்தியதால், கருப்பை புற்று நோய் ஏற்பட்டதாக வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு 417 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க அந்த நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்தியை படிக்க: முகப்பவுடரால் புற்று நோய்: ஜான்சன் & ஜான்சனுக்கு 417 மில்லியன் டாலர் அபராதம்

மனிதக்கறி உண்டு அலுத்துப் போய்விட்டதாக போலீசாரிடமே சொல்லி, நான்கு பேர் வசமாக மாட்டிக் கொண்டார்கள்.

செய்தியை படிக்க: மனித கறி உண்பது அலுத்து விட்டதாகக் கூறி போலீஸிடம் சிக்கிய நால்வர்!

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஒரு பெண்ணை உடனடியாக அவரது கணவர் விவாகரத்து செய்து விடலாம் என்னும் அந்த நடைமுறை, தங்கள் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று ஐந்து பெண்கள் வழக்கு தொடர்ந்ததையடுத்து இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

செய்தியை படிக்க: முத்தலாக் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐந்து பெண்கள் யார்?

சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2,500 நட்சத்திர ஆமைகளை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையும் தமிழ்நாடு வனப் பாதுகாப்புப் படையும் இணைந்து மீட்டன.

செய்தியை படிக்க: சென்னையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2500 நட்சத்திர ஆமைகள் மீட்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்