பால்காரருக்கு உதவ முடியுமா? புதிரை கண்டுபிடியுங்கள்!

உங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்!

மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் நான்காம் பகுதி இது.

புதிர் - 4

பால்காரர் ஒருவரிடம் இரண்டு காலி ஜக்குகள் உள்ளன; ஒன்று மூன்று லிட்டரும், மற்றொன்று ஐந்து லிட்டரும் பிடிக்கும்..

பாலை வீணாக்காமல் ஒரு லிட்டர் பாலை எவ்வாறு அளப்பார்?

விடை:

பால்காரர், முதலில் மூன்று லிட்டர் ஜக்கில் பாலை ஊற்றி அதை ஐந்து லிட்டர் ஜக்கில் நிரப்பிவிட்டார். மீண்டும் அந்த மூன்று லிட்டர் ஜக்கை நிரப்பி அதை ஐந்து லிட்டர் ஜக்கில் ஊற்றினார். எனவே ஒரு லிட்டர் அந்த மூன்று லிட்டர் ஜக்கில் தங்கிவிட்டது.

இந்த புதிர், ஃபிட் பிரைன்ஸால் உருவாக்கப்பட்டது.

முந்தைய புதிர்கள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :