'எம் குழந்தையின் மரணத்தை காட்டி போரை நிறுத்துங்கள்'
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'எம் குழந்தையின் மரணத்தை காட்டி போரை நிறுத்துங்கள்'

  • 23 ஆகஸ்ட் 2017

ஏமனில் சவுதி தலைமையிலான கூட்டணியும், ஹூத்தி கிளர்ச்சிக்காரர்களும் குழந்தைகளை கொல்வதாகவும், அத்துடன் கூட்டணிப்படை உணவு மற்றும் மருந்து விநியோகத்தை தடுப்பதால் லட்சக்கணக்கானோர் பட்டினியில் வாடுவதாகவும் ஐநாவின் கசிந்த ஆவணம் ஒன்று கூறுகின்றது.

போரில் ஈடுபடும் இரு தரப்பும் சர்வதேச சட்டங்களை மீறுவதாக பிபிசிக்கு கிடைத்த ஆவணம் ஒன்று கூறுகின்றது.

இந்தப் போர் மூன்றாவது ஆண்டை எட்டியுள்ளது. இன்று கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சனாவுக்கு வடக்கே குறைந்த பட்சம் முப்பத்தைந்து பேராவது வான் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

உலகின் மிகப்பெரிய மனித நேய அவலமாக இது உருவெடுத்து வருகின்றது. கிளர்ச்சிக்காரர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஹுதைதாவுக்கு பிபிசி சென்றது.

இதில் வரும் காட்சிகள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: