பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகள்

பிபிசி தமிழில் இன்று (புதன்கிழமை) வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆப்கானிஸ்தான் தாலிபான்களுக்கு பாகிஸ்தான் ஆரவளிப்பதாக பார்க்கப்படும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் பாகிஸ்தான் மீதான தனது அழுத்தங்களை அதிகரித்துள்ளார்.

செய்தியை படிக்க:பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கையில் இரு காரணங்களுக்காக கருக்கலைப்புக்கு அனுமதியளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக சிறப்பு சமூக மருத்துவ நிபுணரான டாக்டர் கபில ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

செய்தியை படிக்க: இலங்கை: இரு காரணங்களுக்காக கருக்கலைப்புக்கு அனுமதி?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
'எம் குழந்தையின் மரணத்தை காட்டி போரை நிறுத்துங்கள்'

ஏமனில் சவுதி தலைமையிலான கூட்டணியும், ஹூத்தி கிளர்ச்சிக்காரர்களும் குழந்தைகளை கொல்வதாகவும், அத்துடன் கூட்டணிப்படை உணவு மற்றும் மருந்து விநியோகத்தை தடுப்பதால் லட்சக்கணக்கானோர் பட்டினியில் வாடுவதாகவும் ஐநாவின் கசிந்த ஆவணம் ஒன்று கூறுகின்றது.

செய்தியை படிக்க: 'எம் குழந்தையின் மரணத்தை காட்டி போரை நிறுத்துங்கள்'

படத்தின் காப்புரிமை Getty Images

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதிப்படுத்தி அளித்த தீர்ப்பை, மறுஆய்வு செய்யக் கோரி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், தற்போதைய அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளருமான சசிகலா தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

செய்தியை படிக்க:சசிகலா மறுஆய்வு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உலகைச் சுற்றும் நாடோடிக் குடும்பம்

நமது வேலையை விட்டுவிட்டு உலகை சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது நம்மில் பலருக்கு கனவு. ஆனால், பதினேழு வருடமாக உலகைச் சுற்றும் ஒரு குடும்பம் இன்னமும் தமது சொந்த ஊருக்கு திரும்பவில்லை.

செய்தியை படிக்க: உலகைச் சுற்றும் நாடோடிக் குடும்பம்

படத்தின் காப்புரிமை TOURISM AUSTRALIA/AUSTRALIA ZOO

ஆஸ்திரேலிய வன உயிரியல் பூங்காவில் அண்மையில் பிறந்த அரிய நிற கோலா பெண் குட்டி ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

செய்தியை படிக்க:ஆஸ்திரேலிய பூங்காவில் பிறந்த அரிய வகை வெள்ளை கோலா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :