பிபிசி தமிழில் இன்று... மதியம் 2 மணி வரை வரை வெளியான முக்கிய செய்திகள்

பிபிசி தமிழில் இன்று (வியாழக்கிழமை) மதியம் 2 மணி வரை மணி வரை வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Manisi Thapliyal

"அந்தரங்க உரிமை" என்பது அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையின் அங்கமே என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

செய்தியை வாசிக்க: அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையே: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஏமனில் இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ள போரால், உணவு மற்றும் மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை அந்த நாட்டு அன்றாட வாழ்வில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது,

செய்தியை வாசிக்க: ஏமனில் உணவு, மருந்து தட்டுப்பாடு: பெரும் துயரத்தில் குடிமக்கள்

படத்தின் காப்புரிமை RBI
Image caption நாளை புழக்கத்துக்கு வரவுள்ள ரூ. 20 நோட்டின் "மாதிரி"

இந்தியா முழுவதும் நாளை முதல் ரூ. 200 நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் என்று பாரத ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

செய்தியை வாசிக்க: நாளை புழக்கத்துக்கு வருகிறது ரூ. 200 புதிய நோட்டு

படத்தின் காப்புரிமை AFP

அழிவின் விளிம்பிலுள்ள பென்குயின்கள் உள்பட கடல்வாழ் உயிரினங்களுக்கு அபாயகரமானது என ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள சுரங்க அகழ்வுப் பணித்திட்டத்தை சிலி நாட்டு அரசு நிராகரித்துள்ளது.

செய்தியை வாசிக்க: பென்குயின்களை பாதுகாக்க இரும்பு சுரங்க அகழ்வை நிராகரிக்கும் சிலி

படத்தின் காப்புரிமை Empics

2017 ஆம் ஆண்டு மே மாதம் பிரிட்டனின் தெற்கே உள்ள வடக்கு கடலில், மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் குழு ஒன்று, இரட்டை தலை கொண்ட கடல் பன்றியை நீரில் இருந்து வெளியே எடுத்தது.

செய்தியை வாசிக்க: வலையில் சிக்கிய "இரு தலை" குட்டி கடல் பன்றி

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அணு ஆயுதத் திட்டத்தை தற்காப்பு என்று வட கொரியா கூறுகிறது.

வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டத்துக்கு உதவியதாக அமெரிக்கா குற்றம்சாட்டும் ரஷ்யா மற்றும் சீனாவைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுடன், இந்தத் தடையால் அமெரிக்கர்கள் தொழில் தொடர்பு எதுவும் வைத்துக்கொள்ள முடியாது.

செய்தியை வாசிக்க: வட கொரியாவுக்கு உதவிய ரஷ்ய, சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை

படத்தின் காப்புரிமை BBC THREE

நேரடியாக பாதிக்கப்படும் வரை உறவினர்களை திருமணம் செய்து கொள்வதன் மூலம் உண்டாகும் சிக்கலை நாம் உணரப்போவதில்லை.

செய்தியை வாசிக்க: உறவில் திருமணம்: எல்லா பெண்களாலும் எதிர்க்க முடியுமா?

படத்தின் காப்புரிமை Getty Images

ஷரியத் வழக்கத்தின்படி, தலாக் கூறும் முறையில், "மூன்று மாதம் பத்து நாள்" என அவகாசம் வழங்கப்படும். தலாக் கூறப்பட்ட காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட பெண் கருவுற்றிருக்கக் கூடாது.

செய்தியை வாசிக்க: முத்தலாக்கை திருக்குர்ஆன் ஆதரிக்கிறதா?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

இலங்கையில் முந்தைய மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பேருவளை மற்றும் அளுத்கம பகுதிகளில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் ஏற்பட்ட மோதல்களின் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தோருக்கு இழப்பீடும் நிவாரணமும் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

செய்தியை வாசிக்க: இலங்கை: பேருவளை, ஆளுத்கம மோதலில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :