பிபிசி தமிழில் இன்று... மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகள்

பிபிசி தமிழில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி வரை வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Olivia Acland
Image caption உயிர் தப்பிய தனது சகோதரருடன் கமாரா

சியாரா லியோனில் கடந்த வாரம் ஏற்பட்ட மண்சரிவால் பாதிப்படைந்த ஐந்து பேர் தாங்கள் எப்படி உயிர் தப்பினோம் என்பதையும், தங்களது குடும்பத்தினர், வீடு மற்றும் உடமைகளை பறிகொடுத்த சோகத்தையும் பகிர்ந்து கொள்கின்றனர்.

செய்தியை வாசிக்க: சியாரா லியோன் மண்சரிவு: `நான் அனைத்தையும் இழந்துவிட்டேன்`

ஏமனில் இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ள போரால், உணவு மற்றும் மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை அந்த நாட்டு அன்றாட வாழ்வில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது,

செய்தியை வாசிக்க: ஏமனில் உணவு, மருந்து தட்டுப்பாடு: பெரும் துயரத்தில் குடிமக்கள்

படத்தின் காப்புரிமை HBO

வயோதிகத்தைத் தவிர்க்க, இளைஞர்களின் ரத்தத்தை வயதானவர்களின் உடலில் செலுத்தும் புதிய சிகிச்சை முறையை அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் சோதித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியை வாசிக்க: இளைஞர்களின் ரத்தத்தை முதியவர்களுக்கு செலுத்தினால் இளமை திரும்புமா?

படத்தின் காப்புரிமை RBI
Image caption நாளை புழக்கத்துக்கு வரவுள்ள ரூ. 20 நோட்டின் "மாதிரி"

இந்தியா முழுவதும் நாளை முதல் ரூ. 200 நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் என்று பாரத ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

செய்தியை வாசிக்க: நாளை புழக்கத்துக்கு வருகிறது ரூ. 200 புதிய நோட்டு

படத்தின் காப்புரிமை NARINDER NANU/AFP/Getty Images

அந்தரங்கத்துக்கான உரிமையை, அடிப்படை உரிமையாக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் ஐந்து முக்கிய விஷயங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

செய்தியை வாசிக்க: அந்தரங்க உரிமை: தீர்ப்பில் அறிய வேண்டிய ஐந்து முக்கிய அம்சங்கள்

படத்தின் காப்புரிமை AFP

அழிவின் விளிம்பிலுள்ள பென்குயின்கள் உள்பட கடல்வாழ் உயிரினங்களுக்கு அபாயகரமானது என ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள சுரங்க அகழ்வுப் பணித்திட்டத்தை சிலி நாட்டு அரசு நிராகரித்துள்ளது.

செய்தியை வாசிக்க: பென்குயின்களை பாதுகாக்க இரும்பு சுரங்க அகழ்வை நிராகரிக்கும் சிலி

படத்தின் காப்புரிமை BBC THREE

நேரடியாக பாதிக்கப்படும் வரை உறவினர்களை திருமணம் செய்து கொள்வதன் மூலம் உண்டாகும் சிக்கலை நாம் உணரப்போவதில்லை.

செய்தியை வாசிக்க: உறவில் திருமணம்: எல்லா பெண்களாலும் எதிர்க்க முடியுமா?

படத்தின் காப்புரிமை PIB

அந்தரங்கத்துக்கான உரிமை என்பது அடிப்படை உரிமை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறோம் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

செய்தியை வாசிக்க: அந்தரங்கம் பற்றிய தீர்ப்பு ஆதார் குறித்து எதுவும் கூறவில்லை: மத்திய அரசு

படத்தின் காப்புரிமை Empics

2017 ஆம் ஆண்டு மே மாதம் பிரிட்டனின் தெற்கே உள்ள வடக்கு கடலில், மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் குழு ஒன்று, இரட்டை தலை கொண்ட கடல் பன்றியை நீரில் இருந்து வெளியே எடுத்தது.

செய்தியை வாசிக்க: வலையில் சிக்கிய "இரு தலை" குட்டி கடல் பன்றி

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அணு ஆயுதத் திட்டத்தை தற்காப்பு என்று வட கொரியா கூறுகிறது.

வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டத்துக்கு உதவியதாக அமெரிக்கா குற்றம்சாட்டும் ரஷ்யா மற்றும் சீனாவைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுடன், இந்தத் தடையால் அமெரிக்கர்கள் தொழில் தொடர்பு எதுவும் வைத்துக்கொள்ள முடியாது.

செய்தியை வாசிக்க: வட கொரியாவுக்கு உதவிய ரஷ்ய, சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை

ஹாடோ சூறாவளியால் சீனாவின் தென் பகுதியிலும், மக்கௌவிலும் 12 பேர் பலியாகியுள்ள நிலையில், சூறாவளி பாதித்த இடங்களை சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஹாடோ சூறாவளியால் சீனாவின் தென் பகுதியிலும், மக்கௌவிலும் 12 பேர் பலியாகியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :