கொலைகாரர் யார் ? புதிரை கண்டுபிடியுங்கள்!

உங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்!

வாழ்த்துக்கள்!

மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் ஐந்தாம் பகுதி இது:

ஐந்து பேர் உள்ளனர்.

ஐந்து பேரில் ஒருவரை, மீதமுள்ள நால்வரில் ஒருவர் சுட்டுக் கொன்றுவிட்டார்.

யார் அந்தக் கொலைகாரர் என்று கண்டுபிடியுங்கள்!

காணொளிக் குறிப்பு,

உங்கள் மூளைக்கு பயிற்சி கொடுங்கள்

உங்களுக்காக உதவ சில தகவல்கள்:

  • டான் நிரபராதி ஒருவருடன் நியூயார்க்கில் நடைபெற்ற மராத்தானில் பங்குபெற்றார்.
  • நகரத்திற்கு வருவதற்கு முன்பு விவசாயியாக இருந்தார் மைக்.
  • ஜெஃப் ஒரு தலைசிறந்த கணிணி ஆலோசகர் மற்றும் அடுத்த வாரம் பென்னின் கணினியை பொருத்த விரும்புகிறார்.
  • சில தினங்களுக்கு முன்பு கொலைகாரரின் கால்கள் துண்டிக்கப்பட்டுவிட்டன.
  • பென், ஜாக்கை ஆறு மாதங்களுக்கு முன்பு முதல்முறையாக பார்த்தார்.
  • குற்றம் நடந்ததிலிருந்து ஜாக் தனித்து இருக்கிறார்.
  • டான் அதிகமாக குடிப்பார்.
  • பென் மற்றும் ஜெஃப் தங்களுது கடைசி கணிணியை ஒன்றாக அமைத்தனர்.
  • கொலைகாரர் ஜாக்கின் சகோதரர். அவர்கள் சியட்டலில் ஒன்றாக வளர்ந்தனர்.

விடை:

ஜெஃப், மைக்கை கொன்றுவிட்டார்.

ஜாக், கொலைகாரர் இல்லை. ஏனென்றால் அவர் கொலைகாரரின் சகோதரர்.

டான் கொலைகாரராக இருக்க முடியாது. ஏனென்றால் கொலைகாரரின் கால் சமீபமாக துண்டிக்கப்பட்டுவிட்டது. எனவே இத்தனை சீக்கிரத்திரத்தில் பெரிய மராத்தானில் பங்கு கொள்ள முடியாது.

பென் ஜாக்கை சமீபமாக சந்தித்ததால் அவர் ஜாக்கின் சகோதரர் இல்லை. எனவே, அவர் கொலைகாரர் இல்லை.

எனவே மிஞ்சியிருப்பது ஜெஃப் மற்றும் மைக்தான்.

ஜெஃப் அடுத்த வாரம் பென்னின் கணினியை அமைக்க விரும்புகிறார் என்றால் அவர் உயிருடன் இருக்கிறார்.

அவர்தான் கொலைகாரராக இருப்பார். ஜாக், டான், ஜெஃப் ஆகிய மூன்று பேரும் உயிருடன் இருப்பது உறுதியானது. பென்னின் கணினியை அடுத்த வாரம் பொருத்த விரும்புவதால் பென்னும் உயிருடந்தான் இருக்கிறார். எனவே ஜெஃப் மைக்கை கொன்றார் என்று உறுதியாகிறது.

இந்த புதிர், ஃபிட் பிரைன்ஸிலிருந்து எடுக்கப்பட்டது.

முந்தைய புதிர்கள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :