இந்தப் பாறைகள் அந்தரத்தில் மிதக்கின்றனவா?

இந்தப் பாறைகள் அந்தரத்தில் நிற்பது எப்படி

வானத்தை நோக்கித் தூக்கி எறியப்பட்ட கற்கள் கீழே விழுவதை வேற்றுக்கிரக விவகாரம் போல, பாறைகள் வானத்தில் மிதப்பதைப் போலப் படம் பிடித்துள்ளார் லண்டன் நகரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் டேவிட் க்வெண்டின்

வானத்தை நோக்கி கற்களை வீசி எரிந்து அவை எப்படித் தோன்றுகிறது என்பதைப் பார்ப்பதற்காக முதன் முதலில் புகைப்படம் எடுத்தார். பிறகு பிரிட்டன் முழுவதும் பல இடங்களில் இப்படி கற்களையும், கூழாங்கற்களையும் வானத்தில் எறிந்து படமெடுத்து அதைத் தொகுப்பாக்கினார்.

இந்த விசித்திரக் காட்சிகளை @_RocksInTheSky என்ற பெயரின் கீழ் டிவிட்டரில் டேவிட் பதிவிட்டு வருகிறார்.

`` ஒரு பகல் நேரத்தில் எனது விந்தையான தூண்டுதல் காரணமாக இத்திட்டத்தை ஆரம்பித்தேன். பல ஃப்லிம் ரோல்களை காலி செய்த பிறகு, இதில் உள்ள தொழில்நுட்ப சவால்களை அறிந்துகொண்டேன். தற்போது இந்த விசித்திரமான புகைப்படங்களின் தொகுப்பு என்னிடம் சேர்ந்துகொண்டே இருக்கிறது`` என்கிறார் டேவிட்.

`` இந்தப் படங்கள் நிச்சயம் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டிருக்கும் என பலர் நினைக்கின்றனர். ஆனால் அப்படி இல்லை. வானத்தை நோக்கி கல்லை வீசுவேன் அல்லது அருகில் இருக்கும் நண்பனை வீசச் சொல்லுவேன். கல் வானத்தில் பறக்கும் போது புகைப்படம் எடுத்துவிடுவேன். அவ்வளவு தான்.

இப்போது நான் செய்வதை விட ஃபோட்டோஷாப் செய்வது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும்.`` என்கிறார் அவர்.

`` அதிவேக ஃபிலிம் ரோல்களை பயன்படுத்துவதே இதில் உள்ள உத்தி. காட்சியைப் பதிவு செய்யும் கேமரா ஷட்டரின் வேகத்தை (ஷட்டர் ஸ்பீடு) அதிகரிப்பதால் அந்தரத்தில் கல் அப்படியே நிற்பது போல அழகிய தோற்றம் பெற்றுவிடும். ஷட்டர் வேகம் மட்டும் போதாது, ஒளியை கேமராவுக்கு உள்அனுப்பும் `அபர்ச்சரை` குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் புகைப்படத்தின் முன்னணியும், பின்னணியும் தெளிவாக இருக்கும்.`` என்கிறார் டேவிட்.

மேலும் தொடர்ந்த அவர்,`` வானத்தில் தூக்கி வீசப்படும் கல் அசைவில் இருப்பதால், புகைப்படம் எடுக்க சிறிது நேரமே இருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் விரைவாகப் புகைப்படம் எடுக்க வேண்டும்.

வானத்தில் தூக்கி வீசப்படும் கற்கள், உண்மையில் அங்கேயே இருப்பது போல தோன்றுவதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை`` எனவும் கூறுகிறார் டேவிட்.

பிற செய்திகள்:'

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :