பிபிசி தமிழில் இன்று... மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகள்

பிபிசி தமிழில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை NICOLAS ASFOURI/AFP/Getty Images

அரிசி மானியத்திட்டம் தொடர்பாக நடைபெற்றுவரும் வழக்கின் தீர்ப்புக்கு முன்னால், தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் இங்லக் சின்னவாட் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தியை வாசிக்க: தாய்லாந்தை விட்டு தப்பினார் முன்னாள் பிரதமர் இங்லக் சின்னவாட்

படத்தின் காப்புரிமை PLA

சீன ராணுவப் படையில் சேர்வதற்குத் தகுதி பெற, செயற்கை பானங்கள், சுய இன்பத்துக்குக் கட்டுப்பாடு உள்பட 10 அறிவுரைகளை சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

செய்தியை வாசிக்க: சீன ராணுவத்துக்கு தகுதி பெற 10 அறிவுரைகள்

பாலியல் வழக்கில் ஹரியாணாவைச் சேர்ந்த "தேரா சச்சா செளதா" ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று அம்மாநில நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளதில் 12 பேர் பலியானதாக முதல் கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.

செய்தியை வாசிக்க: பிரபல சாமியார் "குற்றவாளி" என தீர்ப்பு: ஹரியாணா, டெல்லி வன்முறையில்

படத்தின் காப்புரிமை KCNA

வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் ஒரு ஆயுத தொழிற்சாலையை மேற்பார்வையிட்டது பற்றிய செய்தி வெளியீட்டில், இன்னும் சோதிக்கப்படாத ஏவுகணை அமைப்புகளின் விபரங்களை அந்நாடு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை வாசிக்க: ஏவுகணை திட்டங்களை தற்செயலாக கசிய விட்டது வட கொரியா

இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் நீதி அமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார். பெண் நீதி அமைச்சரான தலதா அத்துக்கோரள ஏற்கனவே அமைச்சரவையில் உள்ளார்.

செய்தியை வாசிக்க: இலங்கை வரலாற்றில் முதல் பெண் நீதி அமைச்சர்

படத்தின் காப்புரிமை Getty Images

கிழக்கு ஆப்பிரிக்காவின் எதியோப்பியாவில் உள்ள அனல் தகிக்கும், உலகின் மிக வெப்பமான இடமாக அறியப்படும் இடம் 'தானாக்கில் டிப்ரஷன்'. இங்கு நிலப்பரப்பின் கீழே பூமியின் மூன்று புவி அடுக்குகள் (continental plates) ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்கின்றன.

செய்தியை வாசிக்க: எத்தியோப்பியாவில் ஒரு நரகத்தின் நுழைவாயில்

படத்தின் காப்புரிமை YouTube/Altai Mountains News
Image caption 2014-இல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அந்தப் பாலம் சேதமடைந்தது.

ரஷ்யாவில் ஒரு நதியின் மேல் அமைந்திருக்கும் சேதமடைந்த ஒரு பழைய தொங்கும் பாலத்தைத் தங்கள் சொத்துக்களை விற்று இருவர் புனரமைத்து வருகின்றனர்.

செய்தியை வாசிக்க: ரஷ்யா: புராதன பாலத்தை புனரமைக்க சொத்துக்களை விற்ற இருவர்

படத்தின் காப்புரிமை David Quentin

வானத்தை நோக்கித் தூக்கி எறியப்பட்ட கற்கள் கீழே விழுவதை வேற்றுக்கிரக விவகாரம் போல, பாறைகள் வானத்தில் மிதப்பதைப் போலப் படம் பிடித்துள்ளார் லண்டன் நகரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் டேவிட் க்வெண்டின்

புகைப்படங்களை பார்க்க: இந்தப் பாறைகள் அந்தரத்தில் மிதக்கின்றனவா?

தாயின் கருவில் உள்ள குழந்தைக்கும் பாதுகாப்பில்லாத பிரேசில் (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தாயின் கருவில் உள்ள குழந்தைக்கும் பாதுகாப்பில்லாத பிரேசில்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :