பிபிசி தமிழில் இன்று... வெளியான முக்கிய செய்திகள்

பிபிசி தமிழில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை MONEY SHARMA

பாலியல் வழக்கில் பிரபல சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் "குற்றவாளி" என ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதில் 23 பேர் பலியாகியுள்ளனர்.

செய்தியை வாசிக்க: ஹரியானா சாமியார் குற்றவாளி என தீர்ப்பு: ஆதரவாளர்கள் வன்முறையால் 23 பேர் பலி

படத்தின் காப்புரிமை EPA
Image caption கருப்பினத்தவரை சவப்பெட்டிக்குள் தள்ளி எரிப்பதாகவும் மிரட்டிய வழக்கில் தண்டனை பெற்றுள்ள இரு வெள்ளையின விவசாயிகள்.

கருப்பினத்தவர் ஒருவரை சவப்பெட்டிக்குள் தள்ளியதாகத் தொடரப்பட்ட வழக்கில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வெள்ளையின விவசாயிகள் இருவரை குற்றவாளிகள் என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செய்தியை வாசிக்க: கருப்பினத்தவரை சவப்பெட்டிக்குள் தள்ளிய வழக்கு: இரு வெள்ளையினத்தவர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

படத்தின் காப்புரிமை NICOLAS ASFOURI/AFP/Getty Images

அரிசி மானியத்திட்டம் தொடர்பாக நடைபெற்றுவரும் வழக்கின் தீர்ப்புக்கு முன்னால், தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் இங்லக் சின்னவாட் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தியை வாசிக்க: தாய்லாந்தை விட்டு தப்பினார் முன்னாள் பிரதமர் இங்லக் சின்னவாட்

படத்தின் காப்புரிமை AFP
Image caption லீ ஜே-யோங்

தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீயின் மகனும், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவருமான லீ ஜே-யோங், ஊழல் வழக்கு ஒன்றில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

செய்தியை வாசிக்க: சிறை செல்லும் சாம்சங் நிறுவனத்தின் அடுத்த வாரிசு

டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை காவலர் ஒருவர் ஒளிபரப்பினார்.

செய்தியை வாசிக்க: தமிழக விவசாயிகளின் போராட்டத்தை ஃபேஸ்புக்கில் ஒளிபரப்பிய காவலர்

படத்தின் காப்புரிமை PLA

சீன ராணுவப் படையில் சேர்வதற்குத் தகுதி பெற, செயற்கை பானங்கள், சுய இன்பத்துக்குக் கட்டுப்பாடு உள்பட 10 அறிவுரைகளை சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

செய்தியை வாசிக்க: சீன ராணுவத்துக்கு தகுதி பெற 10 அறிவுரைகள்

இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் நீதி அமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார். பெண் நீதி அமைச்சரான தலதா அத்துக்கோரள ஏற்கனவே அமைச்சரவையில் உள்ளார்.

செய்தியை வாசிக்க: இலங்கை வரலாற்றில் முதல் பெண் நீதி அமைச்சர்

இலங்கையில் 6 மற்றும் 8 வயதான தனது மகள்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் குற்றத்தின் பேரில் 50வயதான தந்தை போலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

செய்தியை வாசிக்க: மகள்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய புகாரில் 50 வயது தந்தை கைது

படத்தின் காப்புரிமை Getty Images

கிழக்கு ஆப்பிரிக்காவின் எதியோப்பியாவில் உள்ள அனல் தகிக்கும், உலகின் மிக வெப்பமான இடமாக அறியப்படும் இடம் 'தானாக்கில் டிப்ரஷன்'. இங்கு நிலப்பரப்பின் கீழே பூமியின் மூன்று புவி அடுக்குகள் (continental plates) ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்கின்றன.

செய்தியை வாசிக்க: எத்தியோப்பியாவில் ஒரு நரகத்தின் நுழைவாயில்

படத்தின் காப்புரிமை YouTube/Altai Mountains News
Image caption 2014-இல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அந்தப் பாலம் சேதமடைந்தது.

ரஷ்யாவில் ஒரு நதியின் மேல் அமைந்திருக்கும் சேதமடைந்த ஒரு பழைய தொங்கும் பாலத்தைத் தங்கள் சொத்துக்களை விற்று இருவர் புனரமைத்து வருகின்றனர்.

செய்தியை வாசிக்க: ரஷ்யா: புராதன பாலத்தை புனரமைக்க சொத்துக்களை விற்ற இருவர்

படத்தின் காப்புரிமை David Quentin

வானத்தை நோக்கித் தூக்கி எறியப்பட்ட கற்கள் கீழே விழுவதை வேற்றுக்கிரக விவகாரம் போல, பாறைகள் வானத்தில் மிதப்பதைப் போலப் படம் பிடித்துள்ளார் லண்டன் நகரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் டேவிட் க்வெண்டின்

புகைப்படங்களை பார்க்க: இந்தப் பாறைகள் அந்தரத்தில் மிதக்கின்றனவா?

ஜிம்பாபவேயின் பிரபலமான சிங்கம்- சிசிலைப் போலவே அதன் ஆண் வாரிசான ஸாண்டாவும் சட்டவிரோதமாக கொல்லப்பட, உலகளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சட்டவிரோத மிருக வேட்டை ஆப்ரிக்க மக்களுக்கு உதவுகிறதா?

இரானில் முஸ்லிம்கள் வேறு மதத்துக்கு மாறுதல் மரண தண்டனைக்கான குற்றமாக இருக்கின்ற போதிலும் நெதர்லாந்துக்கு வந்திருக்கும் இரானின் முஸ்லிம் குடியேறிகள் மற்றும் அகதிகள் அங்கு ஆயிரக்கணக்கில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறுகிறார்கள். (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மதம் மாறும் முஸ்லிம்கள் - காணொளி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :