தானியங்கி லாரிகளை பிரிட்டன் சாலைகளில் சோதிக்கத் திட்டம்

பகுதியளவு தானியங்கி முறையில் செல்லும் லாரிகள் பிரிட்டனின் பெரிய சாலைகளில் அடுத்த ஆண்டு சோதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இந்த தொழில்நுட்பம் ஏற்கெனவே நெதர்லாந்தில் சோதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சோதனைகளை மேற்கொள்ள போக்குவரத்து ஆராய்ச்சி ஆய்வகம் என்ற அமைப்புக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின்படி, அதிகபட்சம் மூன்று லாரிகள் சேர்ந்து அணியாகச் செல்லும்.

முன்னே செல்லும் லாரி மட்டும் டிரைவரால் இயக்கப்படும். பின்னே வரும் லாரிகளின் வேக முடுக்கம், பிரேக் ஆகியவற்றை முன்னே செல்லும் லாரியே வயர்லஸ் முறையில் கட்டுப்படுத்தும்.

இதனால், தனித்தனி டிரைவர்களால் இயக்கப்படும் லாரிகளைவிட இவற்றால் மிக நெருக்கமாகப் பயணிக்க முடியும். இதனால் முன்னால் செல்லும் லாரி காற்றைக்கிழித்து வழியேற்படுத்தும். பின் தொடர்ந்து வரும் லாரிகளுக்கு காற்றினால் ஏற்படும் எதிர்ப்பு விசை அவ்வளவு இருக்காது.

இதனால், எரிபொருள் செலவு மிச்சமாகும். இப்படி மிச்சப்படுத்தப்படும் செலவு கடைசியில் நுகர்வோருக்கான பலனாகப் போய்ச் சேரும் என்கிறார் பிரிட்டன் போக்குவரத்து அமைச்சர் பால் மேனார்டு.

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

ஹரியானா சாமியார் தலைமையகத்தைச் சுற்றி ராணுவம், போலீஸ் குவிப்பு

தானியங்கி முறையில் கட்டுப்படுத்தப்படும்போது முன்னாள் செல்லும் லாரியின் வேக முடுக்கத்துக்கும், பிரேக்குக்கும் ஏற்ப மிகத் துரிதமாக பின்னால் செல்லும் லாரியால் பொருந்திப் போக முடியும்.

மனிதர்களால் இயக்கப்படும்போது அவ்வளவு துரிதமாக வேகத்தை, பிரேக்கை முன்னே உள்ள லாரிக்கேற்ப பொறுத்திக்கொள்ள முடியாது.

மிக முக்கியமாக, எல்லா லாரிகளின் ஸ்டியரிங் மட்டும் மனிதர்களின் கையில்தான் இருக்கும்.

போக்குவரத்து ஆராய்ச்சி ஆய்வகம் சோதனைப் பாதைகளில் இவற்றை இயக்கும். சாலைகளில் செலுத்தி இவற்றை சோதிப்பது 2018 இறுதி வாக்கில் நடக்கும்.

இது போன்றத் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக 2014 முதற்கொண்டு அரசு கூறி வருகிறது.

நடுவில் வாகனங்கள் வந்தால்?

ஒவ்வொரு லாரியிலும் ஸ்டியரிங்கைக் கையாளும் டிரைவர் இருப்பார். சாலையில் ஓடும் மற்ற வாகனங்களை, தடைகளைக் கணக்கில் கொண்டு தேவையான நேரத்தில் லாரிகளின் அணியைப் பிரிக்கவும் மீண்டும் சேர்க்கவும் அவர்களால் முடியும் என்று போக்குவரத்து ஆராய்ச்சி ஆய்வகம் கூறியுள்ளது.

பரிசோதனைகளில் இத் திட்டத்தால் 4 முதல் 10 சதவீத எரிபொருளை மிச்சப்படுத்தமுடியும் என்று தெரிவதாகவும், ஆனால், சாலைகளில் இயக்கும்போதே உண்மையான எரிபொருள் பலன் எவ்வளவு இருக்கும் என்று கூறமுடியும் எனவும் இந்த ஆய்வகம் தெரிவித்துள்ளது.

டச்சு லாரி தயாரிப்பாளர் டி.ஏ.எஃப், பிரிட்டிஷ் போக்குவரத்து நிறுவனமான ரிக்கார்டோ, ஜெர்மன் நிறுவனமான டி.எச்.எல். ஆகியவற்றோடு இணைந்தே இந்த ஆராய்சியை மேற்கொள்ளவிருக்கிறது இந்த ஆய்வகம்.

பாகிஸ்தானுக்கு டிரம்ப் எச்சரிக்கை: நிஜமா, மிரட்டலா?

இலங்கை: சுட்டித்தனத்தால் பொறிவெடியில் சிக்கும் குட்டி யானைகள்

அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளில் லாரிகளை அணிகளாக இயக்கும் பரிசோதனைகள் நடந்துள்ளன.

எனினும் பிரிட்டன் சாலைகள் இத் திட்டத்துக்கு தனித்துமான சவாலாக இருக்கும், பிரிட்டன் சாலைகளில் இச் சோதனைகளை மேற்கொள்ள முடியும் என்று தாம் இன்னும் நம்பவில்லை என்று ஆட்டோமொபைல் அசோசியேஷன் தலைவர் எட்மண்ட் கிங் தெரிவித்துள்ளார்.

"இத்திட்டத்தால் எரிபொருள் சிக்கனம், குறைவான புகை, குறைவான போக்குவரத்து நெரிசல் ஆகிய பலன்கள் இருக்கும் என்றாலும் இத் தொழில்நுட்பம் பாதுகாப்பானதா, பிரிட்டனின் சாலைகளுக்கு ஏற்றதா என்பதை உறுதி செய்துகொள்ளத்தான் வேண்டும். அதற்காகத்தான் இந்தச் சோதனைகளில் பணத்தை செலவிடுகிறோம்" என்கிறார் போக்குவரத்து அமைச்சர் பால் மேனார்டு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :