பிபிசி தமிழில் இன்று... மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகள்

  • 26 ஆகஸ்ட் 2017

பிபிசி தமிழில் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Elijah Nouvelage/Getty Images

பெண்களின் ஆடைகளை அணிந்திருந்ததற்காக சிங்கப்பூரை சேர்ந்த ஓர் ஆணும், திருநங்கையும் ஐக்கிய அரபு எமிரேட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

செய்தியை வாசிக்க: பெண்களின் ஆடையை அணிந்ததற்காக சிங்கப்பூரை சேர்ந்த இருவருக்கு சிறை

படத்தின் காப்புரிமை AFP/Getty Images

பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளி என சி.பி.ஐ. நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட சாமியார் குர்மீத் ராம்ரஹீம் சிங்கின் தேரா சச்சா சொளதா அமைப்பின் தலைமையகத்தை சுற்றிலும் ராணுவம், போலீஸ், அதிரடிப் படை ஆகியவை குவிக்கப்பட்டுள்ளன.

செய்தியை வாசிக்க: ஹரியானா சாமியார் தலைமையகத்தைச் சுற்றி ராணுவம், போலீஸ் குவிப்பு

படத்தின் காப்புரிமை AFP PHOTO/KCNA VIA KNS
Image caption சமீப மாதங்களில் வட கொரியா பல ஏவுகணை சோதனைகளை செய்துள்ளது.

வட கொரியா குறைந்த தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகளை, கடலுக்குள் ஏவி சோதனை செய்துள்ளதாக அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.

செய்தியை வாசிக்க: வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

அதிமுகவில் உள்ள தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுவையில் உல்லாச விடுதியில் தங்கியிருப்பது ஏன் என்பதற்கு டிடிவி தினகரன் புதிய விளக்கத்தை அளித்திருக்கிறார்.

செய்தியை வாசிக்க: உல்லாச விடுதியில் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருப்பது ஏன்?

இலங்கையில் ஒவ்வோர் ஆண்டு ஏராளமான யானைக்குட்டிகள் உள்நாட்டில் ''ஹக்கபட்டாஸ் " என்று அழைக்கப்படும் பொறி வெடியில் சிக்கி இறக்கின்றன.

செய்தியை வாசிக்க: இலங்கை: சுட்டித்தனத்தால் பொறிவெடியில் சிக்கும் குட்டி யானைகள்

படத்தின் காப்புரிமை EPA & Reuters
Image caption பாதுகாப்பு செயலர் ரெக்ஸ் டில்லர்சன் மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் பாகிஸ்தானுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதற்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிரான டிரம்பின் பேச்சுகள் தனிப்பட்ட கருத்துகள் என கூறப்பட்ட நிலையில், இந்த முறை வெளிப்படையாக அவர் பாகிஸ்தானை தாக்கிப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியை வாசிக்க: பாகிஸ்தானுக்கு டிரம்ப் எச்சரிக்கை: நிஜமா, மிரட்டலா?

படத்தின் காப்புரிமை Getty Images

குடிநீரில் அதிக அளவு லித்தியம் இருந்தால் டிமென்ஷியா ஏற்படும் ஆபத்து குறைவாக இருப்பதாக டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

செய்தியை வாசிக்க: அதிக அளவில் லித்தியம் உள்ள குடிநீர் டெமென்ஷியாவைக் குறைக்கும் என்கிறது ஆய்வு

பகுதி அளவில் தானியங்கி முறையில் செயல்படும் லாரி அணிகளை 2018 இறுதியில் தம் நாட்டுச் சாலையில் சோதனை செய்து பார்க்கத் திட்டமிட்டுள்ளது பிரிட்டன். (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இந்த தொழில்நுட்பம் ஏற்கெனவே நெதர்லாந்தில் சோதிக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு லாரிகள் மட்டும் இருந்தன. முன்னால் செல்லும் லாரியில் கட்டுப்பாடு இருக்கும்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் பெண் விவசாயி ஒருவர், "பிரதமர் தங்களை பார்க்க மறுப்பது ஏன்?" என்று தன்னுடைய மனக்குமுறலை பிபிசி தமிழிடம் வெளிப்படுத்தினார். (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
“பிரதமரே, ஏன் எங்களை பார்க்காமல் தவிர்க்கிறீர்கள்?” - பெண் விவசாயின் குமுறல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :