பிபிசி தமிழில் இன்று... முக்கிய செய்திகளின் தொகுப்பு

பிபிசி தமிழில் இன்று (சனிக்கிழமை) வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

"தேரா சச்சா செளதா" அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், பாலியல் வழக்கில் குற்றவாளி என ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, நடைபெற்ற 10 முக்கிய நிகழ்வுகள்.

செய்தியை வாசிக்க: ராம் ரஹீம் வழக்கின் தீர்ப்புக்கு பின்னர் நடைபெற்ற 10 முக்கிய நிகழ்வுகள்

படத்தின் காப்புரிமை ROUF BHAT
Image caption இந்திய ராணுவ வீரர் (கோப்புப் படம் )

புல்வாமா மாவட்டத்தில் இன்று அதிகாலை தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் ஐந்து பாதுகாப்பு படையினர் மற்றும் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

செய்தியை வாசிக்க: காஷ்மீரில் தற்கொலைத் தாக்குதல்: 7 பேர் பலி

படத்தின் காப்புரிமை Reuters
Image caption இங்லக் சின்னவாட்

தாய்லாந்தின் இன்னொரு முன்னாள் பிரதமரும், இங்லக்கின் சகோதரருமான தக்ஷின் சின்னவாட் ஏற்கனவே வேறு ஓர் ஊழல் வழக்கில் இருந்து தப்புவதற்காக 2008 முதல் துபாயில் வசித்து வருகிறார்.

செய்தியை வாசிக்க: 'தப்பியோடிய தாய்லாந்து முன்னாள் பிரதமர் துபாயில் உள்ளார்'

படத்தின் காப்புரிமை Elijah Nouvelage/Getty Images

பெண்களின் ஆடைகளை அணிந்திருந்ததற்காக சிங்கப்பூரை சேர்ந்த ஓர் ஆணும், திருநங்கையும் ஐக்கிய அரபு எமிரேட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

செய்தியை வாசிக்க: பெண்களின் ஆடையை அணிந்ததற்காக சிங்கப்பூரை சேர்ந்த இருவருக்கு சிறை

படத்தின் காப்புரிமை AFP PHOTO/KCNA VIA KNS
Image caption சமீப மாதங்களில் வட கொரியா பல ஏவுகணை சோதனைகளை செய்துள்ளது.

வட கொரியா குறைந்த தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகளை, கடலுக்குள் ஏவி சோதனை செய்துள்ளதாக அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.

செய்தியை வாசிக்க: வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

சென்னையிலிருந்து கடல் மார்க்கமாக மலேசியாவுக்குக் கடத்தப்படவிருந்த 16 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்துள்ளது.

செய்தியை வாசிக்க: மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த ரூ.16 கோடி செம்மரக் கட்டைகள்

அதிமுகவில் உள்ள தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுவையில் உல்லாச விடுதியில் தங்கியிருப்பது ஏன் என்பதற்கு டிடிவி தினகரன் புதிய விளக்கத்தை அளித்திருக்கிறார்.

செய்தியை வாசிக்க: உல்லாச விடுதியில் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருப்பது ஏன்?

இலங்கையில் ஒவ்வோர் ஆண்டு ஏராளமான யானைக்குட்டிகள் உள்நாட்டில் ''ஹக்கபட்டாஸ் " என்று அழைக்கப்படும் பொறி வெடியில் சிக்கி இறக்கின்றன.

செய்தியை வாசிக்க: இலங்கை: சுட்டித்தனத்தால் பொறிவெடியில் சிக்கும் குட்டி யானைகள்

படத்தின் காப்புரிமை NARINDER NANU/ Getty Images
Image caption சீக்கிய மத நூலான குரு கிராந்த் சாஹிப் இயற்றப்பட்டு 413 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸில் நடந்த ஊர்வலத்தின்போது தன் நாவில் கற்பூரத்தை ஏந்தியுள்ள 'நிஹாங்' என்று அழைக்கப்படும் சீக்கிய மத வீரர்.

இந்த வாரம் (ஆகஸ்ட் 19 - 26) உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் சிறந்த புகைப்படங்களின் தொகுப்பு.

புகைப்படங்களை பார்க்க: இந்த வார உலக நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் பெண் விவசாயி ஒருவர், "பிரதமர் தங்களை பார்க்க மறுப்பது ஏன்?" என்று தன்னுடைய மனக்குமுறலை பிபிசி தமிழிடம் வெளிப்படுத்தினார். (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
“பிரதமரே, ஏன் எங்களை பார்க்காமல் தவிர்க்கிறீர்கள்?” - பெண் விவசாயின் குமுறல்

பகுதி அளவில் தானியங்கி முறையில் செயல்படும் லாரி அணிகளை 2018 இறுதியில் தம் நாட்டுச் சாலையில் சோதனை செய்து பார்க்கத் திட்டமிட்டுள்ளது பிரிட்டன். (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இந்த தொழில்நுட்பம் ஏற்கெனவே நெதர்லாந்தில் சோதிக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு லாரிகள் மட்டும் இருந்தன. முன்னால் செல்லும் லாரியில் கட்டுப்பாடு இருக்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :